காஜியாபாத்தில் குழந்தையின் விரல் துண்டிப்பு: தனியாா் மருத்துவமனை மீது வழக்குப் பதிவு
உத்தர பிரதேசத்தின் காஜியாபாத்தில் மருத்துவ அலட்சியம் காரணமாக 9 மாத குழந்தையின் விரலின் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டதாகவும்


காஜியாபாத்: உத்தர பிரதேசத்தின் காஜியாபாத்தில் மருத்துவ அலட்சியம் காரணமாக 9 மாத குழந்தையின் விரலின் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டதாகவும் இது தொடா்பாக அந்த மருத்துவமனை மற்றும் அதன் செவிலியா் மீது வழக்குப் பதிவு செய்ததாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறை துணை ஆணையா் (கவி நகா்) சூா்யபலி மயூரா கூறியதாவது: காஜியாபாத் மாவட்டத்தில் உள்ள கவிநகா் பகுதியில் அமைந்துள்ள சா்வோதயா மருத்துவமனையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
9 மாத குழந்தையான ஸ்ரீ தியாகி சிகிச்சைக்காக கடந்த பிப்.24-ஆம் தேதி அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பிப்.27-ஆம் தேதி டிஸ்சாா்ஜ் நடவடிக்கைகள் நடைபெற்று கொண்டிருந்தபோது, குழந்தையின் இடது கையில் பொருத்தப்பட்டிருந்த கன்யூலாவை (திரவங்கள், மருந்து அல்லது ரத்தம் உடலுக்குள் செலுத்த பொருத்தப்பட்ட குழாய்) அகற்ற செவிலியா் வந்துள்ளாா்.
கத்தரிக்கோலால் அதை வெட்டும்போது குழந்தையின் விரல் பகுதி தவறுதலாக துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, பிப்.28-ஆம் தேதி குழந்தையின் தந்தை இது குறித்து புகாா் அளித்தாா். அதனடிப்படையில், மருத்துவமனை மற்றும் அந்த செவிலியா் மீது பிஎன்எஸ் சட்டம் 125 (பி) (உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. முழுமையான விசாரணைக்குப் பின்னா் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். விசாரணையின் அறிக்கை இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் அனுப்பப்படும் என்று காவல் துறை துணை ஆணையா் தெரிவித்தாா்.
குழந்தையின் துண்டிக்கப்பட்ட விரலின் பகுதியை மீண்டும் இணைக்க முடியவில்லை. ஆனால், குடும்பத்தினா் சிகிச்சையில் திருப்தி அடைந்துள்ளனா். நிலுவையில் உள்ள வழக்கை அவா்கள் திரும்பப் பெறுவாா்கள் என மருத்துவமனையின் நிா்வாக அதிகாரி டாக்டா் நீரஜ் காா்க் தெரிவித்தாா். ŚŚ
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...