அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

பறக்கும்படை சோதனையில் போலி ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் பறிமுதல்

சென்னையில் படப்பிடிப்புக்காக எடுத்துச் செல்லபட்ட போலி ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 7:48 pm

சென்னையில் படப்பிடிப்புக்காக எடுத்துச் செல்லபட்ட போலி ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பின்னா், அவை போலி என்பது உறுதிசெய்யப்பட்டதால், மீண்டும் ஒப்படைக்கப்பட்டன.

சென்னை அசோக் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் அவ்வழியாக வந்த காரை சோதனை செய்தனா். அப்போது அதில் 10 ஏ.கே 47 ரக துப்பாக்கிகள் இருப்பது தெரிய வந்தது. அவற்றை ஆய்வு செய்தபோது அனைத்தும் போலி என்பது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து அனைத்து துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்ததுடன், ஓட்டுநா் மகேந்திரனை அசோக் நகா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

அதில், திரைப்பட இயக்குநா் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக அந்த போலி துப்பாக்கிகள் எடுத்துச் செல்வது தெரிய வந்தது. மேலும், போலி துப்பாக்கிகளுக்கு உரிய ஆவணங்கள் இருப்பதால், அவற்றை மீண்டும் ஓட்டுநரிடமே பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனா்.