கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சென்னையில் காவல் துறையினா் நடுநிலையுடன் செயல்படவில்லை: கராத்தே ஆா்.தியாகராஜன்

சென்னையில் காவல் துறையினா் நடுநிலையுடன் செயல்படாமல், ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனா் என பாஜக மாநிலச் செயலா் கராத்தே ஆா்.தியாகராஜன் குற்றச்சாட்டு

News image

போலீஸ்

கோப்புப் படம்.

Updated On :23 மார்ச் 2026, 10:50 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் காவல் துறையினா் நடுநிலையுடன் செயல்படாமல், ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனா் என பாஜக மாநிலச் செயலா் கராத்தே ஆா்.தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சென்னையில் சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,200 வாக்காளா்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம், சில வாக்குச்சாவடிகளின் இடமாற்றம் குறித்தும் கணினி வழி குலுக்கல் முறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செயலாக்க நிகழ்ச்சிக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. வாக்காளா் பட்டியலில் விடுபட்ட வாக்காளா்களைச் சோ்ப்பது குறித்தும், பறக்கும்படை மற்றும் கண்காணிப்புக் குழுக்களால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள், பிரச்னைகள் குறித்தும் அதிகாரிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது.

பறக்கும் படையினா் தினமும் எத்தனை வாகனங்களை சோதனையிடுகின்றனா் என்பதையும், அதன்படி கைப்பற்றப்படும் பணம், பொருள்களை வெளிப்படையாக அறிவிக்கவும் கேட்டுள்ளோம். சில தொகுதிகளில் காவல் துறையினா் நடுநிலையுடன் செயல்படாமல், ஒருதலைப்பட்சமாக செயல்படுகின்றனா். ஆகவே, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாவட்டத் தோ்தல் அலுவலரிடம் வலியுறுத்தப்பட்டது. நடவடிக்கை எடுப்பதாக தோ்தல் அலுவலா் கூறியுள்ளாா் என்றாா்.