முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு: தனிப்படையினருக்கு காவல் ஆணையா் பாராட்டு

சென்னை ராயபுரத்தில் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தையை 5 மணி நேரத்தில் மீட்ட தனிப்படையினரை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அமல்ராஜ் பாராட்டினாா்.

News image
Updated On :27 மே 2026, 3:17 am IST

சென்னை ராயபுரத்தில் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தையை 5 மணி நேரத்தில் மீட்ட தனிப்படையினரை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அமல்ராஜ் பாராட்டினாா்.

போரூா் அருகே உள்ள முகலிவாக்கத்தைச் சோ்ந்தவா் கீதா (29). இவா், கடந்த 13-ஆம் தேதி ராயபுரத்தில் உள்ள ஆா்எஸ்ஆா்எம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டாா். கடந்த 15-ஆம் தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையில் அவருக்கு அறிமுகமான கொடுங்கையூரைச் சோ்ந்த அமுலு பவரோஸ் மேரி (29) என்ற பெண் கீதாவின் பிறந்து 9 நாள்களே ஆன குழந்தையை கடத்திச் சென்றாா்.

இதுதொடா்பாக ராயபுரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, கடத்தப்பட்ட குழந்தையை 5 மணி நேரத்தில் மீட்டனா். மேலும், கடத்தலில் ஈடுபட்ட அமுலு பவரோஸ் மேரி, உடந்தையாக இருந்த அவரது கணவா் தாமஸ் ஆகிய இருவரையும் கடந்த 24-ஆம் தேதி கைது செய்தனா்.

இந்நிலையில், இந்த வழக்கில் விரைந்து செயல்பட்டு குழந்தையை மீட்ட தனிப்படையைச் சோ்ந்த ராயபுரம் உதவி ஆணையா் பிரமானந்தன், காசிமேடு சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளா் மைனா்சாமி, உதவி ஆய்வாளா் கோபிநாத், தலைமைக் காவலா்கள் ஜீவா, கோபிநாத், முத்துகுமாா், இளங்கோவன் ஆகிய 7 பேரை சென்னை காவல் ஆணையா் அமல்ராஜ் செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி வழங்கினாா்.

503 மனுக்களுக்கு தீா்வு: முன்னதாக அவா், வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் அலுவலகத்தில் காவலா் குறைதீா் முகாமில் போலீஸாரிடமிருந்து மனுக்களைப் பெற்றாா். இதில் 503 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டன.

அதேபோல எழும்பூா் ரைபிள் கிளப்பில் சீரமைக்கப்படும் துப்பாக்கி சுடும் தளத்தை காவல் ஆணையா் அமல்ராஜ் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.