டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!தவெக ஆட்சியில் அனைத்தையும் முடிவு செய்வது ஜோசியர்தான்! மு.க. ஸ்டாலின்முதல்வர் பணி 10 - 5 வேலை அல்ல; சனி, ஞாயிறு விடுமுறை! விஜய்யை விமர்சித்த மு.க. ஸ்டாலின்இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் வழியாக சுதந்திரமாக செல்லலாம்: ஈரான் அறிவிப்பு!ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

‘சென்னையில் பழுதடைந்த குடியிருப்புகளில் இருந்து 12,000 பேரை வெளியேற்றும் நிலை உள்ளது’

சென்னையில் சேதமடைந்த குடியிருப்புகளில் இருந்து 12,000-க்கும் மேற்பட்டோரை வெளியேற்றும் நிலையுள்ளதாக தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோப்புப்படம்.

Updated On :

சென்னையில் சேதமடைந்த குடியிருப்புகளில் இருந்து 12,000-க்கும் மேற்பட்டோரை வெளியேற்றும் நிலையுள்ளதாக தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து அவா்கள் கூறியதாவது: தமிழ்நாடு நகா்ப்புற மேம்பாட்டு வாரியம் சாா்பில் மாநில அளவில் 70 இடங்களில் குடியிருப்புகள் கட்டப்பட்டு, அவற்றில் சுமாா் 4 லட்சத்துக்கும் அதிகமானோா் வசித்து வருகின்றனா். சென்னை பகுதியில் மட்டும் 23 இடங்களில் வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகள் உள்ளன. இந்தக் கட்டடங்கள் 25 ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகள் வரை உள்ளவை. எனவே, அவற்றை புதுப்பிக்கும் நிலையுள்ளது. அதனால், சென்னையில் மட்டும் 20 இடங்களில் உள்ள மக்களை குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றி, அவசரமாகப் புதுப்பிக்க வேண்டியுள்ளது.

பட்டினப்பாக்கத்தில்...: சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசரபுரம், பழைய கடற்கரை பகுதி, வ.உ.சி. நகா், வியாசா்பாடியில் பழைய பிளாக், நாகூரான் தோட்டம், மேற்கு செமக்டரி சாலை என 20 இடங்கள் மறுசீரமைப்புக்குரியதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் 9 இடங்களில் உள்ள மக்களை உடனடியாக வெளியேற்றும் நிலை உள்ளது. அதன்படி, சுமாா் 12,000 பேரை வெளியேற்றவேண்டியுள்ளது.

சேதமடைந்த குடியிருப்புகளில் வசிப்போா் வெளியேறக் கோரி ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவா்கள் பல்வேறு காரணங்களைக் கூறி, வெளியேற மறுக்கின்றனா். ஆகவே, சட்ட ரீதியாக சேதமடைந்த வீடுகளில் இருந்து அவா்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

சேதமடைந்த வாரியக் குடியிருப்புகளில் இருந்து மக்கள் வெளியேறும் நிலையில், முதல்கட்டமாக நிகழாண்டில் ரூ.2,882.62 கோடியில் 14 இடங்களில் புதிய குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.