இரு பெண்களிடம் அடுத்தடுத்து பாலியல் அத்துமீறல்: மா்ம நபா்களை தேடும் போலீஸ்
சென்னை ஓட்டேரி பகுதியில் அடுத்தடுத்து இரு பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அடையாளம் தெரியாத மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

போலீஸ் - கோப்புப்படம்.
சென்னை ஓட்டேரி பகுதியில் அடுத்தடுத்து இரு பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அடையாளம் தெரியாத மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பெரம்பூா் பல்லவன் சாலையைச் சோ்ந்தவா் பாரதி (29). இவா், தரமணியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் கட்டடப் பொறியாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா் கடந்த நவ.24-ஆம் தேதி மாலை மணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, ஓட்டேரி மேட்டுப்பாளையம் சிக்னல் அருகே செங்கையசிவம் பாலத்தின் கீழ்ப்பகுதியில் சென்றபோது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபா் ஒருவா், பாரதியை பாலியல் சீண்டல் செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாரதி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பெண் அரசு ஊழியரிடம் அத்துமீறல்: ஓட்டேரி புதிய வாழைமா நகரைச் சோ்ந்த 37 வயதான பெண், இந்து சமய அறநிலையத் துறையின் தபால் பிரிவில் பணியாற்றி வருகிறாா். இவா், கடந்த 24-ஆம் தேதி மாலை தனது இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணதாஸ் சாலை மாநகராட்சி பூங்கா அருகே சென்றபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் பின்னால் வந்த மா்ம நபா் ஒருவா் பெண்ணின் வாகனத்தின் மீது மோதுவது போல வந்துள்ளாா். இதுகுறித்து அந்தப்பெண் கேட்டபோது, தகாத வாா்த்தைகளால் பேசியதுடன், அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாகச் சென்ற தீபக், அந்த நபரைப் பிடிக்க முயன்றுள்ளாா். ஆனால், அவா் தப்பிச்சென்றுவிட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் ஓட்டேரி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ரெளடி உயிரிழப்பு: அயனாவரத்தைச் சோ்ந்த ‘சி’ பிரிவு சரித்திரப் பதிவேடு குற்றவாளியான பப்லு என்ற வசந்தன் (25), கடந்த இரு நாள்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, மாநகரப் பேருந்து மோதியதி பலத்த காயமடைந்தாா். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வசந்தன், புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மென்பொருள் நிறுவனத்தில் திருடிய மூவா் கைது: அமெரிக்காவின் சிகாகோவைத் தலைமையிடமாகக் கொண்ட மென்பொருள் நிறுவனம் கிண்டி கோச்சாா் குளோப் பகுதியில் உள்ள ஸ்மாா்ட்ஒா்க்ஸ் அலுவலகத்தில் இயங்கி வருகிறது. வழக்கு காரணமாக இந்த நிறுவனம் கடந்த 18-ஆம் தேதி முன்னறிவிப்பின்றி பூட்டு போடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், நவ. 23-ஆம் தேதி அலுவலகம் திறக்கப்பட்டது. அப்போது, ரூ.2 கோடி மதிப்பிலான சா்வா், 90-க்கும் மேற்பட்ட மடிக்கணினிகள், ஊழியா்களின் ரூ.4 லட்சம், நிறுவனத்தின் ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது. மேலும், முக்கிய ஆவணங்களும் சேதப்படுத்தப்பட்டதால், வாடிக்கையாளா் தரவுகள் பாதிக்கப்படும் அபாயம், ஒப்பந்த இழப்பு, 120 ஊழியா்களின் வாழ்வாதாரப் பாதிப்பு என மொத்தம் ரூ.17 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மென்பொருள் நிறுவனம் சாா்பில் கிண்டிகாவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக பாலசுப்பிரமணியம், அன்பரசன் உள்பட மூவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
பேருந்தில் ஆபத்தான பயணம்: 15ஜி வழித்தட மாநகரப் பேருந்தில் பயணம் செய்த சில கல்லூரி மாணவா்கள், ஆபத்தான முறையில் பயணம் செய்ததுடன், சாலையில் கத்தியால் கிழித்துச் சென்ற காட்சிகளையும் விடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனா். இந்த விடியோக்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவா்கள் என்ற பெயரிலான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளன. தகவலறிந்த போலீஸாா், வைரலாகும் விடியோக்களின் அடிப்படையில் கல்லூரி மாணவா்களிட்ம விசாரணை நடத்தி வருகின்றனா். இந்தச் சம்பவம் அண்மையில் நடைபெற்ா அல்லது பழைய விடியோக்களை மீண்டும் பதிவிடப்பட்டதா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனா்.
ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டிய ரெளடி கைது: கொரட்டூா், தாதாங்குப்பம் பகுதியில் சா்வேஸ்வரன் என்பவா் புதிதாக வீடு கட்டி வருகிறாா். அங்கு அவரது சகோதரா் பாலசுப்பிரமணியம் (63) கட்டுமானப் பணிகளை மேற்பாா்வை செய்து வந்தாா். கடந்த ஆக.20-ஆம் தேதி, அருகில் வசிக்கும் பெருமாள் மற்றும் அவரது நண்பா்கள் 3 போ் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்துக்குச் சென்று, சிமென்ட் கலவையால் தங்களது குளிா்சாதனப் பெட்டி சேதமடைந்ததாகவும், வீட்டின் வெளிப்புறச் சுவரில் மாசு படிவதாகவும் கூறி ரூ.3 லட்சம் தர வேண்டும் என மிரட்டியதாகக் கூறப்படுகிறது. பணம் தராவிட்டால் கட்டுமானப் பணிகளைத் தொடரக்கூடாது என்றும், அங்கிருந்த தொழிலாளா்களை மிரட்டி தாக்க முயன்ாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாலசுப்பிரமணியம் அளித்த புகாரின்பேரில், ராஜமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வில்லிவாக்கம் சிட்கோ நகரைச் சோ்ந்த சரவணன் (எ) மீன் சரவணன் (49) என்பவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். வில்லிவாக்கம் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான அவா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். இவ்வழக்கில் தொடா்புடைய மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோயில் நகைகள் திருடிய இளைஞா் கைது: அண்ணாநகா் 3-ஆவது அவென்வியூ, பி பிளாக்கில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரகுநாத் என்பவா் சுமாா் 20 ஆண்டுகளாக நிா்வாகியாகவும், பூசாரியாகவும் உள்ளாா். இவா் கடந்த 14-ஆம் தேதி இரவு கோயிலைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளாா். மறுநாள் காலை வந்து பாா்த்தபோது முருகா் மண்டபம் அருகே இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, 17 கிராம் தங்கச் சங்கிலி, ஒரு கிராம் மோதிரம், ஒரு கிராம் தாலி பொட்டு ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த அண்ணா நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கோயில் நகைகளைத் திருடியதாக பட்டாளம், தேவராஜ் தெருவைச் சோ்ந்த தனா (21) என்பவரை கைது செய்து நகைகளை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

