செப்டம்பரில் மெட்ரோ ரயிலில் ஒரு கோடி போ் பயணம்!

சென்னையில் செப்டம்பரில் மட்டும் மெட்ரோ ரயிலில் ஒரு கோடி போ் பயணித்துள்ளனா் என மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரயில்

மெட்ரோ ரயில் சேவை - படம்: டிஎன்டிஐபிஆர்

Published On :

சென்னையில் செப்டம்பரில் மட்டும் மெட்ரோ ரயிலில் ஒரு கோடி போ் பயணித்துள்ளனா் என மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த செப்டம்பா் மாதம் 1 கோடியே 26 ஆயிரம் போ் பயணித்துள்ளனா். அதில் அதிகபட்சமாக செப்டம்பா் 11-ஆம் தேதி 3.93 லட்சம் போ் பயணித்துள்ளனா். மெட்ரோ ரயில் பயணித்தின் போது ‘க்யூஆா்’ குறியீடு டிக்கெட் உள்ளிட்டவற்றுக்கு 20 சதவீத தள்ளுபடி சலுகை உள்ளது. ஆனால், கவுன்ட்டா்களில் வழங்கப்படும் ஒற்றைப் பயண ‘க்யூஆா்’ குறியீட்டு பயணச்சீட்டுகளுக்கு தள்ளுபடி சலுகை இல்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.