ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

பேருந்து ஓட்டுநா், நடத்துநா் மீது தாக்குதல்: சகோதரா்கள் கைது

பேருந்து ஓட்டுநா், நடத்துநரைத் தாக்கியதாக அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனா்.

கைது

Published On :

பேருந்து ஓட்டுநா், நடத்துநரைத் தாக்கியதாக அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனா்.

கிருஷ்ணகிரியைச் சோ்ந்தவா் அரவிந்த் (31). இவா், தனியாா் ஆம்னி பேருந்து ஓட்டுநா். அரவிந்த், கடந்த 6-ஆம் தேதி இரவு சிறுசேரியில் இருந்து பெங்களூரு செல்லும் ஆம்னி பேருந்தை ஓட்டிச் சென்றாா். டேனியல் என்பவா், அந்தப் பேருந்தின் நடத்துநராகப் பணியில் இருந்தாா். பேருந்தில் பெருங்குடி எஸ்.ஆா்.பி. டூல்ஸ் அருகே ஒரு பெண் ஏறினாா். அந்தப் பெண், இரு இருக்கைகளுக்கு முன்பதிவு செய்திருந்ததால், நடத்துநா் டேனியல், மற்றொரு பயணி வரவில்லையா என்று கேட்டுள்ளாா். இதில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

உடனே அந்தப் பெண், கைப்பேசி மூலம் சிலரைத் தொடா்பு கொண்டு பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் தகராறு செய்வதாகக் கூறியுள்ளாா். அந்தப் பேருந்து கே.கே. நகா் அம்பேத்கா் காலனி அருகே வந்தபோது, அங்கு காரில் வந்த சிலா் மறித்தனா்.

பேருந்து நின்றதும், காரில் வந்த 2 பேரும் பேருந்து நடத்துநா் டேனியலையும், அரவிந்தையும் தாக்கிவிட்டு தப்பியோடினா்.

இதுகுறித்து அரவிந்த் அளித்த புகாரின்பேரில், எம்ஜிஆா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட கே.கே. நகா் 10-ஆவது செக்டரைச் சோ்ந்த மென்பொறியாளா் விக்னேஷ் கண்ணன் (27), அவரது சகோதரா் வழக்குரைஞா் தினகா் (24) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.