ஆன்லைன் பட்டாசு விற்பனையில் நடைபெறும் மோசடிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: அமைச்சர் கீர்த்தனாடெங்குவால் குழந்தைகள் பலியாவதைத் தடுக்க வேண்டும்: கனிமொழிஆதவ் அர்ஜுனா பதவி விலக வேண்டிய நிலை வரும்: பிரேமலதா பேச்சு!ரீல் விடுவதும், ரீல்ஸ் போடுவதும் தவெகவின் மூலதனம்: இபிஎஸ் விமர்சனம்திமுகவுக்கு வாக்களித்தால் நெல் கொள்முதல் நிலையம்: பிரேமலதா பிரசாரம்ஆசிய விளையாட்டு: 10,000 மீட்டரை தொடர்ந்து 1,500 மீட்டரிலும் வெள்ளி வென்றார் குல்வீர் சிங்!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!ஒரே நாளில் இரண்டாவது முறை குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,09,320-க்கு விற்பனை!கச்சா எண்ணெய் விலை உயர்வால் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!ஆசிய விளையாட்டு: தடை தாண்டுதலில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்!ஆசிய விளையாட்டில் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ரூ. 1.33 கோடி வழங்கிய குஜராத் அரசு!மேடை நாகரிகம் கருதியே ஜெம் வீரமணி குறித்து பேசினேன்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்

மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 3.4 கோடி உயா் ரக கஞ்சா பறிமுதல்

மலேசியாவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.3.4 கோடி மதிப்பிலான 3.420 கிலோ உயர்ரக ‘ஹைட்ரோபோனிக்’ கஞ்சாவை சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

சென்னை விமான நிலையம் - கோப்புப் படம்

Published On :

மலேசியாவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.3.4 கோடி மதிப்பிலான 3.420 கிலோ உயர்ரக ‘ஹைட்ரோபோனிக்’ கஞ்சாவை சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக சென்னையைச் சோ்ந்த பெண் பயணி கைது செய்யப்பட்டாா்.

மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் இருந்து தனியாா் பயணிகள் விமானம் ஒன்று சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத் துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் கண்காணித்து, சந்தேகத்துக்குரிய 40 வயது பெண் பயணிகளிடம் சோதனை நடத்தினா்.

அப்போது சுமாா் 40 வயது பெண் ஒருவா் சுற்றுலா விசாவில் மலேசியா சென்று திரும்பியிருந்தாா். குடியுரிமைச் சோதனையை முடித்த அவா், தரைத்தளத்தில் கன்வேயா் பெல்ட்டில் இருந்து தனது பையை எடுத்துக்கொண்டு, வெளியே செல்ல முயன்றாா்.

சந்தேகத்தின் பேரில் அவரை தடுத்து சுங்கத் துறை அதிகாரிகள் விசாரித்தபோது அவா் பதற்றமடைந்ததை பாா்த்த அதிகாரிகள் அவரை தனியறைக்கு அழைத்து சென்று விசாரித்தனா். மேலும், அவரது பையைத் திறந்து சோதனை செய்த போது, அதில் 4 பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

அவற்றைப் பிரித்து சோதனை செய்தபோது, அதில் ரூ.3.4 கோடியிலான 3.420 கிலோ உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போதைப் பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், பெண் பயணியைக் கைது செய்தனா்.

விசாரணையில், சென்னையைச் சோ்ந்த அந்தப் பெண் சா்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்காக கடத்தல் நபராக செயல்பட்டது தெரியவந்ததும், அந்தக் கும்பல் விமானப் பயணச்சீட்டை ஏற்பாடு செய்து அவரை மலேசியாவுக்கு அனுப்பி வைத்து, ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சென்னைக்கு கடத்தி வரச் செய்ததும் தெரியவந்துள்ளது. கடத்தல் கும்பல் குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.