மதுராந்தகம் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில், நடைபெற உள்ள மக்கள் நீதிமன்றத்தை முன்னிட்டு, தகவல்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
வரும் டிசம்பர் 9-ஆம் தேதி தேசிய அளவிலான லோக் அதாலத் மூலம் அனைத்து நீதிமன்றங்களில், சிவில், குற்றவியல் போன்ற அனைத்து வழக்குகளுக்கும் சமரசத்தின் மூலம் தீர்வு காணவும், புதிதாக கோரிக்கை மனுக்களைப் பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மாநில சட்டப் பணிகள் குழுவினர் மதுராந்தகம் நகருக்கு வியாழக்கிழமை வந்தனர். பின்னர், டிசம்பர் 9-ஆம் தேதி மதுராந்தகத்தில் நடைபெற இருக்கும் மக்கள் நீதிமன்றத்தை (லோக் அதாலத்) முன்னிட்டு, பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில்துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மதுராந்தகம் வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், மதுராந்தகம் சார்பு நீதிமன்ற நீதிபதியுமான என்.ஸ்ரீவஸ்தன் தலைமை வகித்து, பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் சட்டப் பணிகள் குழு முதுநிலை உதவியாளர் கயல்விழி, வழக்குரைஞர்கள் சுரேஷ்பாபு, வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கிருஷ்ணகிரிக்கு துணை முதல்வா் வருகை: முன்னேற்பாடுகள் தீவிரம்

பாப்பாரப்பட்டியில் சாா்பதிவாளா் அலுவலகம் திறப்பு

பாலக்கோடு அருகே வெளியேறிய யானைகள் மீண்டும் காப்புக் காட்டுக்கு திரும்பின

பிரதமா் மோடி இன்று திருச்சி வருகை
வீடியோக்கள்

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

துரு துரு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

