மறைமலைநகர் அருகே பல இடங்களில் நடந்து சென்றவர்களிடம் செல்லிடப்பேசிகளை பறித்துச் சென்ற 2 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மறைமலைநகரை அடுத்த பேரமனூர் புத்தர் தெருவைச் சேர்ந்தவர் சேட்டு(31). ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் அவர் செவ்வாய்க்கிழமை மறைமலைநகர் பகுதியில் தேநீர்க் கடை அருகே செல்லிடப் பேசியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அவரிடமிருந்து செல்லிடப் பேசியை பறித்துச் சென்றனர். அதே போல், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (27). ஒரகடத்தில் தங்கி பணிபுரிந்து வருயும் அவர் திருக்கச்சூர் அருகே நடந்து சென்றபோது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்து செல்லிடப் பேசியை பறித்துச் சென்றனர்.
அதேபோல், மேற்கு தாம்பரம் முல்லை நகரைச் சேர்ந்த பாலமுருகன்(30) ஒரகடத்தில் பணிபுரிந்து வருகிறார். செவ்வாய்க்கிழமை சிங்கபெருமாள் கோவில் அருகே சாலையில் நடந்து சென்ற அவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் செல்லிடப்பேசியை பறித்துச் சென்றனர். இதனிடையே, சிங்கபெருமாள்கோவில் சின்ன செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் சாகுல் அமீது(26) சென்னை தி.நகரில் பணிபுரிந்து வருகிறார். அவர் செவ்வாய்க்கிழமை இரவு சாலையில் நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 5 ஆயிரம் ரொக்கத்தையும் செல்லிடப்பேசியையும் பறித்துச் சென்றனர். இது தொடர்பான புகார்கள் மீது மறைமலைநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, செல்லிடப்பேசி பறிப்பு தொடர்பாக திருக்கச்சூர் பகுதியைச்சேர்ந்த தனுஷ் (19) மற்றும் பேரமனூர் பகுதியைச் சேர்ந்த 18 வயது நபர் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









