புதுப்பேர் கிராமத்தில் ஊராட்சி நிர்வாகத்தின் உரிய பராமரிப்பு இல்லாததால் அம்மன் கோயில் அருகில் வைக்கப்பட்ட சூரியசக்தியால் இயங்கக் கூடிய மின்விளக்கு கம்பம் கடந்த பல மாதங்களாக சாய்ந்துள்ளது .
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், காட்டரம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட புதுப்பேர் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பள்ளத் தெரு பகுதியில் உள்ள அம்மன் கோயில் அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக சூரியசக்தி மின்விளக்கு கம்பம் அமைக்கப்பட்டது. இந்தக் கம்பம் அமைக்கப்பட்டதோடு பராமரிப்புப் பணிகளை ஊராட்சி நிர்வாகம் மேற்கொள்ளாததால் இந்த மின்விளக்கு கடந்த ஓராண்டுக்கும் மேலாக எரியவில்லை. இந்நிலையில், இக்கம்பம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கீழே விழுந்தது. இதனால், மாலை மற்றும் இரவு நேரங்களில் வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவதாக அப்பகுதி பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், மின்விளக்கு கம்பம் விழுந்து விட்டது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே மாலை நேரங்களில் அச்சமின்றி கோயிலுக்கு சென்று வர, கோயில் அருகில் சாய்ந்துள்ள இந்த மின்விளக்கு கம்பத்தை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் அல்லது இப்பகுதியில் தெருவிளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








