இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

ராஜீவ் ஜோதி மத நல்லிணக்க யாத்திரை தொடக்கம்

ராஜீவ் ஜோதி மத நல்லிணக்க யாத்திரையின் தொடக்க விழா ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ராஜீவ் ஜோதி  மத நல்லிணக்க  யாத்திரையைத்  தொடங்கி வைத்த  கர்நாடக  மாநில  நகர்ப்புற  மேம்பாட்டுத் துறை  அமைச்சர்  யு.டி.காதர். 

Published On :30 ஜனவரி 2024, 9:57 pm IST


ராஜீவ் ஜோதி மத நல்லிணக்க யாத்திரையின் தொடக்க விழா ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடம் அமைந்துள்ளது. அங்கிருந்து தில்லியில் உள்ள ராஜீவ் காந்தியின் சமாதி அமைந்துள்ள வீர்பூமிக்கு கர்நாடக மாநில காங்கிரஸ் தொழிற்சங்கத் தலைவர் பிரகாசம் தலைமையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் ராஜீவ் ஜோதி மத நல்லிணக்க யாத்திரை புறப்பட்டுச் செல்வது வழக்கம். 
இந்நிலையில், 27ஆம் ஆண்டு ராஜீவ் ஜோதி மத நல்லிணக்க யாத்திரையின் தொடக்க விழா ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கர்நாடக மாநில நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் யு.டி.காதர் கலந்து கொண்டு ஜோதியை ஏற்றி வைத்து யாத்திரையைத் தொடங்கி வைத்தார். இதில் கர்நாடக மாநில மேலவை உறுப்பினர் சுதாகர் ரெட்டி, ராஜீவ் காந்தி நினைவிட சீரமைப்புக் குழு உறுப்பினர் முருகானந்தம், மாவட்டத் தலைவர் மனோகரன், மாவட்ட எஸ்சி, எஸ்டி பிரிவு தலைவர் ஐயப்பன், ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் பொறுப்பாளர் அருள்ராஜ் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு வரும் 20ஆம் தேதி 74ஆவது பிறந்த நாளாகும். இந்நாளை முன்னிட்டு மத நல்லிணக்க ஜோதி யாத்திரை ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தொடங்கி பல்வேறு மாநிலங்களின் வழியாக சாலை மார்க்கமாக செல்லும். இறுதியில், தில்லியில் உள்ள ராஜீவ் காந்தியின் சமாதி அமைந்துள்ள வீர்பூமியில் வரும் 19ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.