காஞ்சிபுரம்
தொன்னாடு கிராம சபைக் கூட்டம் தள்ளிவைப்பு
மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தொன்னாடு ஊராட்சியில் போதிய கூட்டம் இல்லாததால், கிராம சபைக் கூட்டம் தேதி அறிவிக்காமல் தள்ளி வைக்கப்பட்டது.
மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தொன்னாடு ஊராட்சியில் போதிய கூட்டம் இல்லாததால், கிராம சபைக் கூட்டம் தேதி அறிவிக்காமல் தள்ளி வைக்கப்பட்டது.
மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில், தொன்னாடு ஊராட்சியில், ஊராட்சி செயலர் பாலசுந்தரம் தலைமையில் ஊராட்சி மன்ற நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சுதந்திர தினத்தையொட்டி, புதன்கிழமை கிராம சபைக் கூட்டத்தை நடத்துமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது. அதனால் கிராம சபைக் கூட்டத்தை தொன்னாடு சேவை மையக் கட்டடத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் பங்கேற்ற மண்டலத் துணை வட்டார
வளர்ச்சி அலுவலர்அகமது வந்து இருந்தார். ஆனால் குறைவான மக்கள் வந்திருந்ததால் சுமார் 2 மணி நேரத்துக்கு பின் கிராம சபைக் கூட்டம் மறுதேதி அறிவிக்காமல் தள்ளி வைக்கப்பட்டது.