கொக்கு மருந்தை குடித்த 2 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
செங்கல்பட்டு அருகே குளிர்பானம் என நினைத்து கொக்கு மருந்தை குடித்து மயங்கி விழுந்த இரு சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


செங்கல்பட்டு அருகே குளிர்பானம் என நினைத்து கொக்கு மருந்தை குடித்து மயங்கி விழுந்த இரு சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஒழலூர் கிராமத்தைச் சேர்ந்த ரவியின் மகன் சிவகாசி (9), வெங்கடேசனின் மகன் வல்லரசு (10). இவர்கள் இருவரும் அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை இருவரும் விளையாடிக் கொண்டிருந்தபோது செடி மறைவில் கிடந்த பாட்டிலில் குளிர்பானம் இருப்பதாக நினைத்து குடித்து விட்டு மயங்கி கிடந்தனர்.
இருவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து செங்கல்பட்டு கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், வயலில் கொக்குகளை அழிப்பதற்காக குளிர்பான பாட்டிலில் கொக்கு மருந்தை வைத்து பயன்படுத் தி விட்டு மீதியை செடியோரமாக விட்டுச் சென்றதும். சிறுவர்கள் அதனை குளிர்பானம் என நினைத்து குடித்து மயங்கி விழுந்தது தெரியவந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...