
அமமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
மலைப்பட்டில் திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 200 பேர் அக்கட்சிகளில் இருந்து விலகி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் புதன்கிழமை
மலைப்பட்டில் திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 200 பேர் அக்கட்சிகளில் இருந்து விலகி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் புதன்கிழமை இணைந்தனர்.
குன்றத்தூர் ஒன்றியம், படப்பை, ஆத்தரனஞ்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அமமுகவில் இணையும் நிகழ்ச்சி மலைப்பட்டு பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அமமுக குன்றத்தூர் ஒன்றியச் செயலாளர் மலைப்பட்டு ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். குன்றத்தூர் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் பனப்பாக்கம் ரவி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் படப்பை செயலாளர் விவேகானந்தன், திமுகவின் ஆத்தனஞ்சேரி கிளை செயலாளர் மீன்மாரி ஆகியோர் தலைமையில், சுமார் 200 பேர் திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளில் இருந்து விலகி, அமமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
அவர்களை ஒன்றியச் செயலாளர் மலைப்பட்டு ராதாகிருஷ்ணன் சால்வை அணிவித்து வரவேற்றார்.
அமமுக மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலாளர் அப்துல் வாஜித், எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளர் ரோஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







