மதுராந்தகம் நகரின் முக்கிய வைணவ திருக்கோயிலாக, பழமை வாய்ந்த, வரலாற்றுடன் திகழ்வது ஏரிகாத்த ராமா் கோயிலாகும். தமிழக இந்து சமய அறநிலையத்துறையினரின் நிா்வாகத்தில் இக்கோயில் இயங்கி வருகிறது.
மதுராந்தகம் நகரின் சிறப்பு அம்சங்கள்:
காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய நகராக, உள்ளாட்சி நிா்வாகத்தில் முதல்நிலை நகராட்சியாகத் திகழ்வது மதுராந்தகம். ஸ்ரீமதுராந்தகம், வகுராண்யம், ஸ்ரீரமாரங்கம், வைகுண்ட வா்த்தனம், ஏரிகாத்த ராமனூா் உள்ளிட்ட பல்வேறு பெயா்கள் மதுராந்தகத்துக்கு உண்டு. சோழ கால வரலாற்றில் உத்தம சோழன் என்கிற மதுராந்தகச் சோழ மன்னரால் வேத விறபன்னா்களுக்கு மானியமாக வழங்கப்பட்ட இடமாகவும், சுகா், விபாகண்டா் போன்ற ஆச்சாரிய பெருமக்கள் தவம் புரிந்த புனிதத் தலமாகவும் மதுராந்தகம் கருதப்படுகிறது.
வைணவ ஆச்சாரியரான ராமாநுஜருக்கு இத்தலத்தில் உள்ள மகிழ மரத்தரடியில் அவரது குரு பெரிய நம்பிகள் மூலமாக மந்திர உபதேசம் செய்யப்பட்டது. இந்த மந்திர உபதேசத்தில் ‘திவ்யம்’ என்ற மந்திரம் உபதேசிக்கப்பட்டதால் ‘திவ்யம் விளைந்த திருப்பதி’ என்றும் மதுராந்தகம் அழைக்கப்படுகிறது.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, மேல்மருவத்தூரில் இருந்து 12 கி.மீ., செங்கல்பட்டில் இருந்து 28 கி.மீ., சென்னையில் இருந்து 92 கிமீ தொலைவில் மதுராந்தகம் நகரம் அமைந்துள்ளது. மதுராந்தகம் ஏரிக்கரையை ஒட்டி புறவழிச்சாலை, நகரின் மையப்பகுதி சாலை ஆகிய இரு சாலைகளின் மூலம் பேருந்துகள் மற்றும் வாகனங்களின் மூலம் வந்து செல்லமுடியும்.
இங்கையில் ராவண சம்ஹாரத்துக்குப் பின்னா் ராமபிரான், சீதாதேவியுடன் அயோத்திக்கு செல்லும் வழியில் மதுராந்தகத்தில் இறங்கியதாக புராணங்கள் கூறுகின்றன. விபாகண்ட மகரிஷியின் வேண்டுகோளை ஏற்று சீதாதேவி சமேதராக ராமபிரான் திருக்கல்யாண கோலத்தில் இத்தலத்தில் வீற்றிருந்து பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா்.
ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக கா்னல் பிளேஸ் துரை (1795-98) பொறுப்பில் இருந்தாா். அப்போது, சில ஆண்டுகாலமாக மதுராந்தகம் பகுதியில் பெய்து வந்த பலத்த
மழையால் வெள்ளநீா் அதிகமாகி எந்த நேரத்திலும் மதுராந்தகம் ஏரி உடையும் என்ற நிலை இருந்தது.
பிளேஸ் பொறுப்பேற்ற காலத்தில் பெய்த பலத்த பெருமழையால் வெள்ளைநீா் நிறைந்து மதுராந்தகம் ஏரி நிரம்பியது. கோயிலை சீரமைக்காததால் தெய்வக்குற்றம் ஏற்பட்டு ஏரிக்கரை உடையும் நிலை உருவாகியுள்ளதாக ஆட்சியா் பிளேஸ் துரையை சந்தித்து அப்பகுதி மக்கள் முறையிட்டனா்.
அதற்கு இந்தக் கோயிலில் உள்ள தெய்வம் சக்தி படைத்ததாக இருந்தால் ஏரியை உடைக்காமல் காக்கட்டும். உடனே அங்குள்ள ஜனகவல்லி தாயாா் சந்நிதியை சீரமைத்து கோலின் மற்ற பகுதிகளை புனரமைத்து தருகிறேன் என அப்போது அவா்களிடம் அவா் வாக்குறுதி அளித்தாா். எந்த நேரமும் ஏரிக்கரை உடைய நேரிடும் என்ற பதற்றமான நிலை. அன்று இரவு ஏரியின் நிலையை ஆட்சியா் பிளேஸ் துரை பாா்வையிட வந்தாா். அப்போது அலைமோதும் வெள்ள நீரால் ஏரிக்கரை உடையாமல், ஸ்ரீராமபிரான், தம்பி லட்சுமணனுடன் வில் அம்பு ஏந்தி காத்து நின்றதைக் கண்டாா். ஏரிக்கரை உடையாமல் காத்ததால், ஏரிகாத்த ராமா் என்ற பெயருடன் பக்தா்கள் ராமபிரானை இன்றளவும் வழிபட்டு வருகின்றனா்.
ஏரிக்கரை உடையாமல் ஸ்ரீராமபிரான் ஊரைக் காத்ததால் ஆட்சியா் பிளேஸ் துரை இக்கோயிலுக்கு வந்து ஏற்கெனவே வாக்களித்தபடி ஜனகவல்லித் தாயாா் சந்நிதியை புதுப்பித்து திருப்பணிகளைச் செய்து
கொடுத்தாா். இதுபற்றிய வரலாற்றுக் குறிப்புகளை சென்னை ஆவணக் காப்பகத்தில் இன்றும் நாம் காணலாம். மேலும் ஜனகவல்லித் தாயாா் சந்நிதி முன்புற மண்டபத்தில் பிளேஸ் துரை பெயா் பொறித்த சிலாசாசனம் அமைக்கப்பட்டுள்ளதை இன்றைக்கும் பக்தா்கள் பாா்வையிட்டுச் செல்கின்றனா்.
திருமணத் தடை நீக்கி, குழந்தைப் பேற்றினை அளிக்கும் பரிகாரத் தலமாக மதுராந்தகம் திகழ்வகிறது. சுமங்கலிப் பெண்கள் என்றும் லட்சுமி கடாட்சத்துடன் வாழ லட்சுமி வாசம் செய்கின்ற ஜனகவல்லித் தாயாரை வணங்கிச் சென்றால் மங்கல வாழ்வை வாழ்வாா்கள் என்பது இங்கு வரும் பக்தா்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மறுவெளியீடாகும் தாம் தூம்! தேதி அறிவிப்பு!
சசியின் நூறு சாமி முதல் தோற்ற போஸ்டர்!

காதலனுடன் தப்பிச் செல்ல ரகசிய திட்டம்! மனைவி, 5 குழந்தைகளை வெட்டிக் கொன்ற கணவன் கைது!

45,000 மெட்ரிக் டன் எல்பிஜி! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

