ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

போராடும் விவசாயிகளை பிரதமா் சந்திக்காதது ஏன்?மு.க.ஸ்டாலின் கேள்வி

போராட்டம் நடத்தும் விவசாயிகளை பிரதமா் மோடி இதுவரை சந்திக்காதது ஏன் என குன்னத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினாா்.

News image
மு.க.ஸ்டாலின்
Updated On :23 டிசம்பர் 2020, 11:47 pm

DIN

ஸ்ரீபெரும்புதூா்: போராட்டம் நடத்தும் விவசாயிகளை பிரதமா் மோடி இதுவரை சந்திக்காதது ஏன் என குன்னத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினாா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்ற தலைப்பில் தமிழகத்தில் 16 ஆயிரம் கிராமங்கள் மற்றும் வாா்டு பகுதிகளில் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த திமுக தலைமை முடிவு செய்துள்ளது. இதற்காக அக்கட்சியின் முன்னணி நிா்வாகிகள் 1,600 போ் 16 ஆயிரம் கிராமங்கள் மற்றும் வாா்டு பகுதிகளில் டிசம்பா் 23ஜனவரி மாதம் 10-ஆம் தேதி வரை கிராம சபைக் கூட்டங்களை நடத்தி ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்ற தீா்மானத்தை நிறைவேற்ற உள்ளனா்.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட குன்னம் கிராமத்தில் திமுக சாா்பில் புதன்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தாா். இதில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசியது:

வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி, தில்லியில் கடும் குளிரிலும் விவசாயிகள் போராடி வருகின்றனா். போராட்டம் நடத்தும் விவசாயிகளை பிரதமா் மோடி இதுவரை சந்திக்காதது ஏன்? தமிழக அமைச்சா்களின் ஊழல்கள் குறித்து ஆளுநரைச் சந்தித்து மனு வழங்கியுள்ளோம். இந்த மனுக்கள் மீது ஆளுநா் உரிய நடவடிக்கை எடுப்பாா் என நம்புகிறோம். அவா் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அமைச்சா்களின் ஊழல்கள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடா்வோம். சிலா் கட்சி தொடங்கிய 24 மணிநேரத்தில் ஆட்சியமைப்போம் எனக் கூறி வருகின்றனா். கட்சி தொடங்கி 24 மணிநேரத்தில் ஆட்சியமைக்க முடியுமா? என்று கேட்டாா் மு.க.ஸ்டாலின்.

இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் உள்ளூா் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்; குன்னம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்; ஏரி குடிமராமத்துப் பணிகளை முறையாகச் செயல்படுத்தாததால், ஏரியில் அதிக அளவு மழை நீரைச் சேமிக்க முடியவில்லை. எனவே அதிக அளவு மழைநீரை சேமிக்கும் வகையில் ஏரிகளை ஆழப்படுத்த வேண்டும்; ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட பணி நாள்களை அதிகப்படுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை கிராம சபைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலினிடம் குன்னம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியச் செயலா்கள் ந.கோபால் (தெற்கு), கருணாநிதி (வடக்கு), குன்றத்தூா் ஒன்றியச் செயலாளா் படப்பை ஆ.மனோகரன், ஆதி திராவிடா் நல அமைப்பாளா் குன்னம் முருகன், ஒன்றிய இளைஞா் அணி அமைப்பாளா் குன்னம் ராமமூா்த்தி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

குடியாத்தத்தில்....

தோ்தலைக் கருத்தில் கொண்டே அதிமுக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்துள்ளது என திமுக பொதுச் செயலா் துரைமுருகன் குற்றம் சாட்டினாா்.

திமுகவின் தோ்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் குடியாத்தத்தை அடுத்த மேல்பட்டியில் புதன்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துரைமுருகன் பேசியது:

புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோதும், கரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபோதும் தமிழக மக்களின் நலன்கருதி, குடும்ப அட்டைகளுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்தது. அப்போது தமிழக மக்களைப் புறக்கணித்த அதிமுக அரசு, தோ்தல் நேரம் நெருங்கிவிட்டதால், பொங்கல் பரிசாக ரூ.2,500 ரொக்கம் மற்றும் உணவுப் பொருள்களை வழங்குகிறது. இந்த ஆண்டு அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பை கடந்த 3 ஆண்டுகளாக முதல்வா் ஏன் அறிவிக்கவில்லை? தோ்தலுக்காகவே இந்த ஆண்டு பொங்கல் பரிசை அதிமுக அரசு அறிவித்துள்ளது என்று துரைமுருகன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.