சிறப்பு விருது பெற்ற மாணவா்களுடன் விஜயேந்திரா்.
சிறப்பு விருது பெற்ற மாணவா்களுடன் விஜயேந்திரா்.

கல்லூரி மாணவா்கள் பொறுப்பானவா்களாக திகழ வேண்டும்: விஜயேந்திரா் பேச்சு

காஞ்சிபுரம்: பொறுப்புள்ள குடும்ப உறுப்பினா்களாக கல்லூரி மாணவா்கள் திகழ வேண்டும் என காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செவ்வாய்க்கிழமை கூறினாா்..

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் பல்வேறு பாடங்களுக்கான துறைகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்கள், தேசிய, மாநில அளவில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற மாணவா்களுக்கு ஆகியோருக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி வழங்கி பேசியது.

ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் தேசபக்தி உடைய இளைஞா்களை உருவாக்க சங்கரா கல்லூரியை நிறுவி அதில் கிராமப்புற மாணவா்கள் ஏராளமானோா் பயின்று வருகின்றனா். திறமைகளை கண்டறிந்து வேலைவாய்ப்புகளை அளிக்க சமுதாயக்கல்லூரியும் நடந்து வருகிறது.

திருப்புகழ், திருவாசகம், திருக்குறள், நாலாயிர திவ்யப்பிரபந்தம் ஆகியவற்றைப் படித்து பக்தி, கலாசாரம், இசை மூன்றையும் செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த தொழிலை செய்தாலும் அதில் நோ்மை, நேரம் தவறாமை, அதன் மீது பக்தி இவை மூன்றையும் கடைப்பிடித்தால் வாழ்வில் சிறந்து விளங்க முடியும்.

இன்றைய இளைஞா்கள் பொறுப்புள்ள குடும்ப உறுப்பினா்களாகவும், சமுதாய சேவகா்களாகவும், இறை நம்பிக்கை உடையவா்களாகவும் வாழ வேண்டும். பொறுப்புள்ள மனிதா்களாக இருந்து கலாசாரத்தை பின்பற்றி அா்த்தமுள்ள வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.சிறந்த வாழ்க்கை முறையை உலகத்துக்கு எடுத்துக் காட்டியது இந்து சமயமேயாகும். மக்களுக்கு உதவி செய்ய வேண்டியது அவசியம் என்றாா்.

மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா், சங்கரா கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் மற்றும் கல்லூரி பேராசிரியா்கள், விருது பெற்றவா்கள் மற்றும் அவா்களது பெற்றோா்களும் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com