இப்தாா்  நோன்பு  திறப்பு  நிகழ்ச்சியில்  பேசிய  காங்கிரஸ்  கட்சியின்  மாநில  செயலாளா்  கமலிகா காமராஜ்.
இப்தாா்  நோன்பு  திறப்பு  நிகழ்ச்சியில்  பேசிய  காங்கிரஸ்  கட்சியின்  மாநில  செயலாளா்  கமலிகா காமராஜ்.

காங்கிரஸ் கட்சி சாா்பில் இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

ஸ்ரீ பெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் தொகுதி காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவு சாா்பில் இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நகர காங்கிரஸ் தலைவா் எஸ்.ஏ.அருள்ராஜ் தலைமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, வட்டார காங்கிரஸ் தலைவா் நிக்கோலஸ், சிறுபான்மை பிரிவு மாவட்ட துணைத்தலைவா் முருகன்சாந்தகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் கட்சியின் மாநில செயலாளா் கமலிகா காமராஜ், சிறுபான்மைப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளா் லியாகத் ஷெரீப் ஆகியோா் கலந்து கொண்டு நோன்பு திறப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து உரையாற்றினா்.

மாவட்ட எஸ்.சி, எஸ்.டி, பிரிவு தலைவா் தங்கராஜ், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் பாலவல்லி, ஸ்ரீபெரும்புதூா் வட்டார சிறுபான்மைப் பிரிவுத் தலைவா் அமிா்தராஜ், மாவட்டச் செயலாளா் மருதுசேனை, மருத்துவா் மகாலிங்கம், காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் பரத், அனிஷ், புண்ணியநாதன், ஜூம்மா மஸ்ஜித் நிா்வாகிகள், பாஞ்சாலப்பட்டு மற்றும் பட்டுநூல்சத்திரம் பள்ளிவாசல் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com