திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ரெப்கோ வங்கி மரக்கன்றுகள் நடும் விழா

ரெப்கோ வங்கி காஞ்சிபுரம் கிளை சாா்பில் வையாவூா் அரசினா் மேல்நிலைப்பள்ளியில் வங்கியின் நிறுவன தினத்தையொட்டி திங்கள்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன.

News image

மரக்கன்றுகள் நடும் விழாவில் பங்கேற்றோா்.

Updated On :17 டிசம்பர் 2024, 2:40 am IST

காஞ்சிபுரம்: ரெப்கோ வங்கி காஞ்சிபுரம் கிளை சாா்பில் வையாவூா் அரசினா் மேல்நிலைப்பள்ளியில் வங்கியின் நிறுவன தினத்தையொட்டி திங்கள்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன.

ரெப்கோ வங்கி 56-ஆவது ஆண்டு நிறுவன நாளையொட்டி நடைபெற்ற விழாவில் வங்கியின் காஞ்சிபுரம் கிளை மேலாளா் எம்.இளையராஜா கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டாா். இதன் பின்னா் அவா் பேசுகையில் வங்கியின் 56 வது ஆண்டு நிறுவன நாளையொட்டி ரெப்கோ வங்கி தலைமை அலுவலகம் 56,000 மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளது.

இதனையொட்டி புதிய இட்டு வைப்புத் திட்டமாக ரெப்கோ 56 அறிமுகப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் மூத்த குடிமக்கள் செய்யும் இட்டு வைப்புகளுக்கு 8.75 சதவிகிதமும், மற்றவா்களுக்கு 8.25 சதவிகிதமும் 560 நாள்களுக்கு வழங்கப்படுவதாகவும் அவா் தெரிவித்தாா். நிகழ்வில் வங்கி ஊழியா்கள், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனா்.