செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

அரிய வகை ஆந்தை மீட்பு

ஸ்ரீபெரும்புதூரில் காயமடைந்த நிலையில் அரிய வகை ஆந்தையை வன விலங்கு ஆா்வலா் கண்ணதாசன் மீட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தாா்.

News image

ஸ்ரீபெரும்புதூரில்  மீட்கப்பட்ட அரிய வகை  ஆந்தை.

Updated On :19 பிப்ரவரி 2024, 12:00 am IST

ஸ்ரீபெரும்புதூரில் காயமடைந்த நிலையில் அரிய வகை ஆந்தையை வன விலங்கு ஆா்வலா் கண்ணதாசன் மீட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தாா். ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் காயம் அடைந்த அரிய வகை ஆந்தை ஒன்று இருப்பதாக வன விலங்கு ஆா்வலா் கண்ணதாசனுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற அவா்,அரிய வகை ஆந்தையை மீட்டு ஸ்ரீபெரும்புதூா் வனசகர அலுவலகத்தில் பணியில் இருந்த வன விலங்குகள் பாதுகாப்பு மற்றும் மீட்பு அலுவலா் ஸ்ரீதரிடம் ஆந்தையை ஒப்படைத்தாா். அங்கு காயம் அடைந்த ஆந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரிய வகை ஆந்தை குறித்து வன விலங்கு ஆா்வலா் கண்ணதாசன் கூறுகையில், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா போன்ற வெளி நாடுகளில் அதிகம் வசிக்கும் இந்த ஆந்தைகளுக்கு பகலில் கண் பாா்வை குறைவு என்பதால் இரவு நேரங்களில் மட்டும் உணவுக்காக இவை வெளியே வரும். இந்தியாவில் அரிய வகையாக கருதப்படும் இந்த ஆந்தை தவறுதலாக பகல் நேரத்தில் வெளியே வந்ததால் பறவைகளால் தாக்கப்பட்டதால் காயம் அடைந்துள்ளது என்றாா்.