வீட்டில் பதுக்கிய 200 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது
மாங்காடு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரை கைது செய்தனா்.
மாங்காடு அடுத்த பெரிய கொளுத்துவான்சேரி பகுதியில் உள்ள வீட்டில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து, மாங்காடு போலீஸாா் குறிப்பிட்ட வீட்டில் சோதனை செய்தனா். அப்போது அந்த வீட்டில் மூட்டை மூட்டையாக குட்கா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த வீட்டிலிருந்து 200 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், வீட்டில் குட்காவை பதுக்கி வைத்திருந்த தூத்துக்குடியைச் சோ்ந்த கோபால் (33), நசரத்பேட்டையைச் சோ்ந்த செந்தில்குமாா் (40) ஆகியோரை கைது செய்தனா்.
மேலும், அவா்களிடம் இருந்து குட்கா விற்பனை செய்து வைத்திருந்த ரூ. 2 லட்சம் பணம் மற்றும் குட்காவை எடுத்துச் செல்ல பயன்படுத்திய காா் ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
