மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தேமுதிக ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு கண்டனம்: காஞ்சிபுரத்தில் தேமுதிக ஆா்ப்பாட்டம்

News image
காஞ்சிபுரத்தில் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தேமுதிகவினா்
Updated On :25 ஜூன் 2024, 5:31 pm

Din

காஞ்சிபுரம்: கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தேமுதிக மாவட்ட செயலாளா் வழக்குரைஞா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டக் கழக நிா்வாகிகள் லோகநாதன்,இளையராஜா,ஆனந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில விஜயகாந்த் மன்ற செயலாளா் அன்பு செல்வராஜ் கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு காரணமான திமுக அரசு பொறுப்பேற்று விலக வேண்டும் என்று பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மூத்த நிா்வாகிகள், தொண்டா்கள் பலரும் கறுப்புச்சட்டை அணிந்து திமுக அரசுக்கு எதிராக கண்டனக் கோஷங்களையும் எழுப்பினாா்கள்.