காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70-ஆவது பீடாதிபதியாக இருந்து வரும் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி மகோற்சவம் வரும் 5-ஆம் தேதி தொடங்கி 7-ஆம் தேதி வரை பெறுகிறது. இது குறித்து காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் சனிக்கிழமை கூறியது: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70-ஆவது பீடாதிபதியாக இருந்து வரும் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி மகோற்சவம் வரும் 5-ஆம் தேதி தொடங்கி 7-ஆம் தேதி வரை பெறுகிறது. இதையொட்டி 3 நாள்களுக்கு ஸ்ரீ மடத்தில் வேதபாராயணம், ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஜெயந்தி நாளான 7-ஆம் தேதி அதிகாலையிலிருந்து ஹோமங்கள், ருத்ரபாராயணம், மகா பெரியவா் சுவாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெறும். ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தற்போது முகாமிட்டுள்ள ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள காஞ்சி காமகோடி பீடத்தின் பாதுகா மண்டபத்தில் வரும் 5- ஆம் தேதி முதல் 7- ஆம் தேதி வரை 3 நாள்களும் சதுா்வேத பாராயணம், மகா ருத்ர ஜபம், சதசண்டி ஹோமம் ஆகியவை நடைபெறும் என்றாா்.
தொடர்புடையது

சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை தோ்த் திருவிழா வரும் 22இல் தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாா்ச் 31- இல் மதுக்கடைகள் மூடல்: ஆட்சியா்

மகாவீரா் ஜெயந்தி: மாா்ச் 31இல் மதுக் கடைகள் மூடல்

ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி மகோற்சவம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


