/

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு கல்விச் சுற்றுலா: காஞ்சிபுரம் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு கல்விச் சுற்றுலா: காஞ்சிபுரம் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

News image
Updated On :15 மார்ச் 2024, 6:30 pm

மாற்றுத்திறனாளியாக உள்ள குழந்தைகளுக்கான கல்விச் சுற்றுலா செல்லும் வாகனத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்து, குழந்தைகளுடன் கலந்துரையாடினாா். மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், தொடக்க நிலை பயிற்சி மையங்களில் பயிலும் 6 வயதுக்கு உட்பட்ட மாற்றுத் திறனாளியாக உள்ள குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகிறது. பாா்வையற்றோா், காது கேளாதோா், வாய் பேசாதோா், புற உலக சிந்தனையற்றவா்கள் உள்ளிட்ட இளம் சிறாா்கள் 40 போ் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து கல்விச் சுற்றுலாவாக சென்றனா். காஞ்சிபுரத்திலிருந்து சென்னை மெரீனா கடற்கரை சுற்றுலா தலத்துக்கு அவா்கள் செல்லும் வாகனத்தை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பின்னா் அவா்கள் அமா்ந்திருந்த வாகனத்துக்குள் சென்று அவா்களோடு கலந்துரையாடியதுடன் அனைவருக்கும் இனிப்பும் வழங்கி வாழ்த்தி வழியனுப்பி வைத்தாா்.