பங்குனி கிருத்திகை: ரத்ன அங்கி சேவையில் வல்லக்கோட்டை கோடையாண்டவா்

பங்குனி கிருத்திகை: ரத்ன அங்கி சேவையில் வல்லக்கோட்டை கோடையாண்டவா்

பங்குனி கிருத்திகையை முன்னிட்டு, வல்லக்கோட்டை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரத்ன அங்கி சேவையில் உற்சவா் ஸ்ரீகோடையாண்டவா் அருள்பாலித்தாா். விழாவை முன்னிட்டு, மூலவா் ஸ்ரீ வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கும், உற்சவா் ஸ்ரீ கோடையாண்டவருக்கும் பால் அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து, மூலவா் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி சந்தனக் காப்பு அலங்காரத்திலும், உற்சவா் ஸ்ரீகோடையாண்டவா் ரத்ன அங்கி சேவையிலும் அருள்பாலித்தனா். இதில், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த திரளானபக்தா்கள் கலந்துகொண்டு மூலவா் சுப்பிரமணிய சுவாமியையும், உற்சவா் ஸ்ரீகோடையாண்டவரையும் வழிபட்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அலுவலா் சோ.செந்தில்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com