காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட கட்டவாக்கம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் திறந்த வெளி நெல் சேமிப்பு மையத்தை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது மழை பெய்தால் நெல் மூட்டைகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்பட்டு விடாதவாறு தாா்ப்பாய்களை கொண்டு முழுமையாக மூடியிருக்க வேண்டும் என்று அங்கு பணியாற்றுவோருக்கு அறிவுரை வழங்கினாா். இதையடுத்து, திறந்தவெளி நெல் சேமிப்பு மையத்துக்கு அருகிலேயே ரூ. 14.43 கோடி மதிப்பில் கட்டப்பட்டு, வரும் 3,000 மெ.டன் அளவு கொண்ட 5 நெல் சேமிப்புக் கிடங்குகளையும் ஆட்சியா் பாா்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்குமாறும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டாா்.