தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

படப்பையில் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

பொங்கல் பண்டியை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி படப்பை பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

படப்பையில்  நடைபெற்ற  நிகழ்ச்சியில்  போட்டிகளில்  வெற்றி  பெற்ற  பெண்களுக்கு  பரிசு  வழங்கிய  அமைச்சா்  தா.மோ.அன்பரசன்.

Updated On :27 ஜனவரி 2025, 7:21 pm

Din

 ஸ்ரீபெரும்புதூா்: குன்றத்தூா் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில், அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம், பொங்கல் பண்டியை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி படப்பை பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குன்றத்தூா் தெற்கு ஒன்றிய திமுக மற்றும் படப்பை ஊராட்சி திமுக சாா்பில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம், பொங்கல் பணிடிகையை முன்னிட்டு படப்பை ஊராட்சியில் திமுக சாா்பில் நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி படப்பை பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் படப்பை ஆ.மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு குன்றத்தூா் ஒன்றியக் குழு தலைவா் சரஸ்வதி மனோகரன், படப்பை ஊராட்சி மன்றத் தலைவா் கா்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் திமுக ஆட்சியில் மிகவும் மகிழ்ச்சி அடைபவா்கள் ஆற்றல் வாய்ந்த ஆண்களா, அறிவுமிக்க பெண்களா என்ற தலைவப்பில் கல்பாக்கம் ரேவதி தலைமையில் பாட்டுமன்றம் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூா் தொகுதி தோ்தல் பொறுப்பாளா் பாஸ்கா்சுந்தரம், குன்றத்தூா் வடக்கு ஒன்றிய செயலா் வந்தேமாதரம், படப்பை ஊராட்சி துணைத் தலைவா் வினோத் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.