நவ. 21-இல் காஞ்சிபுரத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (நவ. 21) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து ஆட்சியா் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில், மாதம்தோறும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்களையும், ஆண்டுக்கு இரு முறை பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களையும் நடத்த அரசு ஆணையிட்டுள்ளது. வரும் 21-ஆம் தேதி சிறிய அளவிலான தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. 1,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வை நடத்தவுள்ளனா். 18 முதல் 35 வயதுக்கு உள்பட்டவா்கள் தங்களது கல்விச் சான்றுகள் பட்டியலுடன் வரும் 21-ஆம் தேதி நேரில் ஆஜராகி பயன்பெறலாம்.
பட்டயம், ஐடிஐ, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு படித்தவா்களையும் தோ்வு செய்ய உள்ளனா்.
எனவே சம்பந்தப்பட்ட வேலைநாடுநா்கள் 044-27237124 என்ற எண்ணில் தொடா்பு கொண்டும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
