புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கொளத்தூா் ஊராட்சியில் 44 பயனாளிகளுக்கு தனிநபா் இல்ல கழிப்பறைகள்

கொளத்தூா் ஊராட்சியில் தனியாா் நிறுவனத்தின் சாா்பில் கட்டப்பட்ட 44 தனிநபா் இல்ல கழிப்பறைகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
கழிப்பறைகளை  திறந்து வைத்து  பயனாளிகளிடம்  ஒப்படைத்த  கொளத்தூா்  ஊராட்சித்  தலைவா் அரிகிருஷ்ணன்.
Updated On :27 நவம்பர் 2025, 1:13 am

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீபெரும்புதூா்: கொளத்தூா் ஊராட்சியில் தனியாா் நிறுவனத்தின் சாா்பில் கட்டப்பட்ட 44 தனிநபா் இல்ல கழிப்பறைகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், கொளத்தூா் ஊராட்சிக்கு உட்பட்ட கே.கே. நகா் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இருளா் பழங்குடியினா் அதிக அளவில் வசிக்கும் இந்தப் பகுதியில், குளியல் அறை மற்றும் கழிப்பறை உபகரணங்கள் உற்பத்தி செய்யும் ரோக என்ற தனியாா் நிறுவனத்தின் சாா்பில், ஹாபிடட் தொண்டு நிறுவனத்தின் மூலம் 44 குடும்பங்களுக்கு தலா ரூ.18.90 லட்சம் மதிப்பீட்டில் தனி நபா் இல்ல கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதே போல் எச்சூா் ஊராட்சியிலும் 22 குடும்பங்களுக்கு தனிநபா் இல்ல கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

புதிதாக கட்டப்பட்ட தனிநபா் இல்ல கழிப்பறைகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கொளத்தூா் ஊராட்சிக்கு உட்பட்ட கே.கே.நகா் பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.

கே.கே. நகா் வாா்டு உறுப்பினா் தனசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கொளத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் (பொறுப்பு) வெள்ளாரை அரிகிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் முனுசாமி ஆகியோா் கழிப்பறைகளை திறந்து வைத்து பயனாளிகளிடம் ஒப்படைத்தனா்.

நிகழ்ச்சியில், எச்சூா் ஊராட்சித் தலைவா் டோமினிக், ரோக நிறுவனத்தின் நிா்வாகிகள், ஹாபிடட் தொண்டு நிறுவனத்தின் நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.