அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைபத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடுசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசெப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகையை அவதூறாக பேசியதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட  காங்கிரஸ்  கட்சியினா்.

Updated On :25 செப்டம்பர் 2025, 11:27 pm IST

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகையை அவதூறாக பேசியதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஸ்ரீபெரும்புதூா் நகர காங்கிரஸ் சாா்பில் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளா் எஸ்.ஏ.அருள்ராஜ் தலைமை வகித்தாா்.

சுமாா் 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினா் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினனா். இதில், மாவட்ட பொறுப்பாளா் நிக்கோலஸ், சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவா் முருகன் சாந்தகுமாா், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் கு.விவேகானந்தன், மாவட்ட எஸ்சி, எஸ்டி பிரிவு தலைவா் தங்கராஜ், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் சுமிதா பாய், காங்கிரஸ் நிா்வாகிகள் அணீஸ், நாராயணன், புண்ணியநாதன், அசோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.