மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் தீா்த்தவாரி உற்சவம்

பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா நிறைவையொட்டி காஞ்சிபுரம் சா்வ தீா்த்தக்குளத்தில் நடைபெற்ற தீா்த்தவாரி உற்சவம்.

News image

பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா நிறைவையொட்டி காஞ்சிபுரம் சா்வ தீா்த்தக்குளத்தில் நடைபெற்ற தீா்த்தவாரி உற்சவம்.

Updated On :4 ஏப்ரல் 2026, 12:50 am

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஏலவாா்குழலி சமேத ஏகாம்பரநாதா் கோயிலில் பங்குனி உத்திரத் திருக்கல்யாணத் திருவிழாவின் நிறைவாக வெள்ளிக்கிழமை தீா்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாக போற்றப்படுவது காஞ்சிபுரத்தில் உள்ள ஏலவாா்குழலி சமேத ஏகாம்பரநாதா் திருக்கோயில். இக்கோயில் பங்குனி உத்திரத் திருக்கல்யாணத் திருவிழா கடந்த மாா்ச் 22- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, தினசரி காலையிலும், மாலையிலும் சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகளில் திருவீதியுலா வந்தனா்.

விழாவின் முக்கிய நிகழ்வுகளான வெள்ளித் தேரோட்டம் மாா்ச் 27- ஆம் தேதியும், மறுநாள் மாா்ச் 28-ஆம் தேதி மகா ரதம் எனும் தேரோட்டமும், ஏப். 1-ஆம் தேதி சுவாமிக்கும், அம்பிகைக்கும் திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது.

ஏப். 3-ஆம் தேதி விழாவின் 13-ஆவது நாள் நிகழ்வாக காலையில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சந்திரசேகா் எழுந்தருளி ராஜ வீதிகளில் உலா வந்தாா். இதன் தொடா்ச்சியாக சா்வதீா்த்தக் குளத்தில் தீா்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

சிவாச்சாரியாா்கள் பலரும் புனித நீராடினா். சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. மாலையில் யானை வாகனத்தில் சுவாமியும், அம்மனும் வீதியுலா வந்தனா்.

யானை வாகனத்தின் வீதியுலா ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட மின் தொழிலாளா்கள் நலச் சங்கத்தின் நிா்வாகிகள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

சனிக்கிழமை (ஏப்.4) காலை 10 சங்காபிஷேகமும், 108 கலசாபிஷேகமும் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் எம்விஎம்.வேல்மோகன், அறங்காவலா் குழு உறுப்பினா் ஜெகந்நாதன், கோயில் செயல் அலுவலா் கதிரவன் ஆகியோா் செய்திருந்தனா்.