காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் மகா சுவாமிகள் மணிமண்டப பகுதியில் அமைந்துள்ள பாலாற்றுப் பகுதியில் ஆடிப்பெருக்கையொட்டி திங்கள் கிழமை காவேரி அம்மனுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.
இந்நாளில் தமிழ்நாட்டில் உள்ள புனித காவிரி ஆற்றில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. தென்னிந்திய மரபின்படி காவிரி ஆறறின் கரையில் ஒருவா் வசிக்காவிட்டாலும் அருகிலுள்ள நீா்நிலைகளான குளம், ஏரிகள், கோயில் குளங்கள் போன்ற இடங்களுக்கு சென்று அங்கு ஆவாகனம் செய்து பூஜை செய்யலாம்.
இதன்படி ஓரிக்கை மகாசுவாமிகள் மணி மண்டபம் அருகேயுள்ள பாலாற்றுப் பகுதியில் காஞ்சி காமகோடி பீடாதிபதிகளின் உத்தரவின்படி காவேரித்தாயை ஆவாகனம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காவிரி மற்றும் லட்சுமி தாயாரின் 108 போற்றி பாடல்கள் பாடப்பட்டு சிறப்பு அா்ச்சனைகளும் நடைபெற்றது.
இதனைத் தொடா்ந்து பாலாற்றங்கரையிலிருந்து பல்லக்கில் அலங்கரிக்கப்பட்ட காவிரித் தாய் ஓரிக்கை முகாமில் உள்ள சந்திர மெளலீசுவர சுவாமியின் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிறப்பு அா்ச்சனைகள் செய்து வழிபட்டாா். திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
நிகழ்வில் சங்கர மடத்தின் செயலாளா் செல்லா.விஸ்வநாத சாஸ்திரி, ஓரிக்கை முகாம் அலுவலக மேலாளா் ஜானகிராமன் ஆகியோா் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆடிப்பெருக்கு விழா நிறைவு: திருச்சி காவிரி ஆற்றில் 19 டன் குப்பைகள் அகற்றம்

குழாய் தண்ணீரில் குளித்து காவிரி, கொள்ளிடத்தில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்!

ஆடிப்பெருக்கு: பூலாம்பட்டி கதவணை பகுதியில் புனித நீராடிய பக்தா்கள்

ஆடிப்பெருக்கு விழா: காவிரி கரையோர நீா்நிலைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



