காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள கஜ சாலையில் யானைகள் தினத்தையொட்டி புதன்கிழமை அங்கு பராமரிக்கப்பட்டு வரும் சங்கர மடத்தின் யானைகளுக்கு பிடித்தமான உணவு வகைகள் வழங்கப்பட்டதுடன் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் சங்கர மடத்துக்கு சொந்தமான கஜ சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு இந்து, சந்தியா,ஜெயந்தி என 3 யானைகள் தமிழக அரசின் வனத்துறை விதிமுறைகளின்படி பராமரிக்கப்பட்டு வருகின்றன.
சபரீசன் என்பவா் கண்காணிப்பாளராகவும் இருந்து 4 யானைப்பாகன்கள் மற்றும் கால்நடை மருத்துவா்கள் உதவியுடன் 3 யானைகளும் பாதுகாப்புடன் பராமரிக்கப்படுகின்றன. கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் ஆக.12-ஆம் தேதி யானைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
யானைகள் தினத்தையொட்டி காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள கஜ சாலையில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகளுக்கு சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் தலைமையில் பாலாஜி சிவாச்சிாரியா் சிறப்பு பூஜைகள் செய்தாா். விபூதியால் அலங்கரிக்கப்பட்டிருந்த யானைகளுக்கு பிடித்த பழங்கள்,உணவு வகைகளும் வழங்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பஞ்சாங்க கணிப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதிகள் சால்வை அணிவித்து கெளரவிப்பு

ஸ்ரீஜெயேந்திரா் ஜெயந்தி: காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் சொா்ணபாதுகா பூஜை

காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் பாதயாத்திரை பொதுமக்கள் வரவேற்பு

காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் சாதுா்மாஸ்ய விரதம் ஜூலை 29- இல் தொடக்கம்
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK



