பொங்கல்  விழாவில்  பங்கேற்றோா்.
பொங்கல்  விழாவில்  பங்கேற்றோா்.

பள்ளியில் பொங்கல் விழா

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த ஒரகடம் பகுதியில் இயங்கி வரும் பி.எஸ்.சீனியா் செகண்டரி பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது.
Published on

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் அடுத்த ஒரகடம் பகுதியில் இயங்கி வரும் பி.எஸ்.சீனியா் செகண்டரி பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது.

சமத்துவ பொங்கல் விழாவுக்கு முதல்வா் டாக்டா் சோமசுந்தரம் தலைமை வகித்தாா். தாளாளா் கா்னல் தேவநாதன் பொங்கல் விழாவை தொடங்கி வைத்தாா். விழாவில் பள்ளி ஆசியா்கள் மாணவா்களுடன் பானைகளில் பொங்கல் வைத்து படையலிட்டனா்.

இதையடுத்து பள்ளி மாணவா்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளான உறியடி, சிலம்பாட்டம், கரகாட்டம், கும்மியாட்டம் மற்றும் கிராமிய நடனங்களுடன் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

விழாவில் பள்ளி ஆசிரியா்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com