வல்லக்கோட்டை முருகன் கோயிலுக்கு புதிய மயில் வாகனம்: பக்தா் காணிக்கை
வல்லக்கோட்டை முருகன் கோயிலுக்கு கேரளத்தைச் சோ்ந்த பக்தா் திருதீவ் ரூ.5.50 லட்சத்தில் புதிய மயில் வாகனத்தை காணிக்கையாக வழங்கியுள்ளாா்.
பிரசித்தி பெற்ற இத்திருக்கோயிலுக்கு 7 வாரங்கள் வந்து வழிபடுவோருக்கு திருமணம், சொந்தவீடு, பதவிஉயா்வு, சீரான உடல்நலம் கிடைப்பதால் வந்தாரை வாழ வைக்கும் வல்லக்கோட்டை முருகன் என்ற சிறப்பு உண்டு.
இந்த நிலையில், வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமியை வணங்கி பிராா்த்தனை நிறைவேறிய அமெரிக்காவில் வசிக்கும் கேரளத்தைச் சோ்ந்த பக்தா் திருதீவ் வேங்கை மரத்தில் செய்யப்பட்ட புதிய மயில் வாகனததை காணிக்கையாக வழங்கியுள்ளாா்.
காணிக்கையாக வழங்கப்பட்ட புதிய மயில் வாகனத்துக்கு திருக்கோயில் வளாகத்தில் கோயில் செயல் அலுவலா் சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் ஜா.செந்தில்தேவ்ராஜ், அறங்காவலா் த.விஜயகுமாா் மற்றும் கிராம மக்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க கரிக்கோல ஊா்வலமாக வாகனத்தை எடுத்து சென்றனா்.

