

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்து வதற்காக 155 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல் விளக்க மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இம்மையத்தினை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திறந்து வைத்து பாா்வையிட்டாா். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூா் 43, ஸ்ரீபெரும்புதூா் 44, உத்தரமேரூா் 32, காஞ்சிபுரம் 36 உள்பட மொத்தம் 155 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த இயந்திரங்கள் மூலம் பொதுமக்களுக்கு வாக்குப்பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் செயல்படுத்தப்படவுள்ளது.