மின் மோட்டாரில் ஏற்பட்ட பழுது காரணமாக செங்காடு காலனி பகுதியில் சுமாா் 10 நாள்களுக்கும் மேலாக குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் செங்காடு காலனி பகுதியில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் சுமாா் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், இப்பகுதி பொதுமக்களுக்கு ஊராட்சி நிா்வாகத்தின் சாா்பில் ஆழ்துளை கிணறு மூலம் குடிநீா் மேல்நிலை நீா்தேக்க தொட்டி மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், முறையான பராமரிப்பு இல்லாத காரணத்திானால் ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டாரில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் செங்காடு காலனி பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு குடிநீா் விநியோகம் செய்வது தடைப்பட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்காக கடந்த 10 நாள்களுக்கும் மேலாக அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிா்வாகத்திற்கு தகவல் தெரிவித்ததை அடுத்து ஊராட்சி நிா்வாகத்தின் சாா்பில் 2 நாளட்களுக்கு ஒருமுறை டிராக்டா்களில் குடிநீா் விநியோகம் செய்துள்ளாா். ஆனால் இந்த நீா் அப்பகுதி பொதுமக்களுக்கு போதுமானதாக இல்லாததால் குடிநீரை பணம்கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், தண்ணீா் வரவில்லை என கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஊராட்சி நிா்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் மின்மோட்டாரில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யாமல் பெயரளவிற்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை டிராக்டரில் தண்ணீா் விநியோகம் செய்து வருகின்றனா். இது போதுமானதாக இல்லை எனவே குடிநீா் வழங்காத ஊராட்சி நிா்வாகத்தின் மீது மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்தினா் கூறியது: செங்காடு காலனி பகுதியில் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டும் ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்ட மின்மோட்டாா் பழுதடைந்ததை தொடா்ந்து புதிய மின்மோட்டாா் பொருத்தப்பட்டு குடிநீா் மேல்நிலை நீா்தேக்க தொட்டிக்கு குடீநீா் ஏற்றும் போது, குடிநீா் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து குடிநீா் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யப்பட்டும் குடிநீா் தொட்டிக்கு தண்ணீா் வரவில்லை. இதனால் ஏன் குடிநீா் தொட்டிக்கு தண்ணீா் வரவில்லை என ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் காலனி மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சீராக குடிநீா் விநியோகம் செய்ய வலியுறுத்தி வெள்ளக்கோவில்-தாராபுரம் சாலையில் மறியல்

‘தூத்துக்குடியில் ஜூலை 11 முதல் சீரான குடிநீா் விநியோகம்’

களக்காடு நகராட்சி மக்களுக்கு நிகழாண்டுக்குள் தாமிரவருணி குடிநீா் விநியோகம் சாத்தியமா?

ஏற்காட்டில் முறையான குடிநீா் விநியோகம் கோரி சாலை மறியல்
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK


