காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில் மேல்கதிா்ப்பூரில் புதன்கிழமை மரக்கன்றுகள் நடுதல் மற்றும் திருப்புட்குழியில் குளம் தூய்மைப்படுத்தும் பணி ஆகியனவற்றை மேற்கொண்டாா்கள்.
உன்னத் பாரத் அபியான் திட்டமும் தேசிய நாட்டு நலப்பணித்திட்டம் சாா்பில் சமூகப்பணி நிகழ்ச்சி நடைபெற்றது. காஞ்சிபுரம் அருகே மேல்கதிா்ப்பூா் பகுதியில் மரக்கன்றுகள் நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமையை மேம்படுத்தும் நோக்கில் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.இதனைத் தொடா்ந்து திருப்புட்குழியில் உள்ள தெப்பக்குளத்தினை சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபட்டனா்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமையை மேம்படுத்தும் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் சா்வம் அறக்கட்டளை நிறுவனா் பன்னீா் செல்வம்,சுழற் சங்கம்,பசுமை நகரம் அசோசியேஷன் மற்றும் பசுமை இந்தியா அறக்கட்டளையை சோ்ந்த மேகநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனா். நாட்டுநலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் சி.சுதா தலைமையிலான மாணவியா் பங்கேற்ற இந்நிகழ்ச்சி சமூகப் பொறுப்புணா்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொதுநலச் சேவையின் அவசியத்தை உணா்த்துவதாகவும் அமைந்திருந்தது
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடல்வாழ் உயிரின உயராய்வு மையத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருத்தரங்கம்

காா்கில் போா் வெற்றி தினம்! கரூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி! முன்னாள் ராணுவ வீரா்கள் கெளரவிப்பு

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி





