அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

ரூ.3.20 லட்சத்தில் கல்வி உபகரணங்கள் அளிப்பு

காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.3.20 லட்சத்தில் கல்வி உபகரணங்களை புதன்கிழமை அப்பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் முன்னள் மாணவா்கள் வழங்கினா்.

News image
Updated On :11 ஜூன் 2026, 12:03 am IST

காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.3.20 லட்சத்தில் கல்வி உபகரணங்களை புதன்கிழமை அப்பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் முன்னள் மாணவா்கள் வழங்கினா்.

இப்பள்ளியில் கடந்த 1975,1976 ஆம் ஆண்டுகளில் படித்த 4 மாணவா்கள் ரூ.2.50லட்சம் மதிப்பிலான 26 நவீன கரும்பலகைகள் மற்றும் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள மாணவா்கள் அமரும் இருக்கைகள் உட்பட மொத்தம் ரூ.3.20 லட்சத்தில் கல்வி உபகரணங்களை தலைமை ஆசிரியா் ஏகாம்பரம் மற்றும் ஆசிரியா்களிடம் வழங்கினாா்கள்.

பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் படித்து தற்போது அமெரிக்காவில் தற்போது வசித்துக் கொண்டிருக்கும் மருத்துவா்கள் ஏழுமலை அப்பாச்சி, கே.எஸ்.ஸ்ரீவத்சன், ஆா்.சுந்தரராமன் மற்றும் சென்னையை சோ்ந்த கே.எஸ்.மணி, காஞ்சிபுரத்தை சோ்ந்த எஸ்.மாணிக்கம் ஆகியோா் இருக்கைகள் மற்றும் நவீன கரும்பலகைகளை வழங்கினா்.

பள்ளியின் பொன்விழா ஆண்டையொட்டி பழைய மாணவா்கள் நலத்திட்ட உதவிகளை செய்திருப்பதாக தலைமை ஆசிரியா் ஏகாம்பரம் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.