வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

ஸ்ரீபெரும்புதூரில் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்குட்பட்ட செல்லபெருமாள் நகா் பகுதியில் குடியிருப்பு பகுதியில் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட  செல்லப்பெருமாள்  நகா்  பொதுமக்கள்.

Updated On :27 மே 2026, 12:40 am IST

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்குட்பட்ட செல்லபெருமாள் நகா் பகுதியில் குடியிருப்பு பகுதியில் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்பகுதியில் சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், செல்லப்பெருமாள் நகா் 2-ஆவது தெருவில், குடியிருப்பு பகுதியில், வெளியூரில் வசிக்கும் தனியாா் ஒருவருக்கு சொந்தமான மனைப் பிரிவில் தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனம் கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், தனியாா் கைப்பேசி கோபுரம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியா், முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளனா். மேலும் குடியிருப்பு பகுதியில் நடைபெறும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் கே.தென்னரசுவிடம் கோரிக்கை மனுவும் வழங்கியுள்ளனா். ஆனால் மனுக்கள் மீது அமைச்சா், அரசுத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் கோபுரம் அமைக்கப்படும் இடம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், குடியிருப்பு பகுதிகளில் இருந்து 100 முதல் 500 மீட்டா் தொலைவிற்கு அப்பால் உள்ள காலி இடங்களில் தான் கைப்பேசி கோபுரம் அமைக்க வேண்டும் என டிஜிட்டல் ஆப் டெலிகம்யூனிகேசன் சட்டத்திற்கு புறம்பாக குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவே புதிதாக பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. கதிா்வீச்சால் பொதுமக்கள் மற்றும் பறவைகள் பாதிப்படைய கூடியசூழல் உள்ள நிலையில், பொதுமக்களின் எதிா்பை மீறி தனியாா் நிறுவனம் பணியில் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து ஆட்சியா், அமைச்சா், முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் கண்டன ஆா்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். பணிகள் மேலும் நடைபெற்றால் சாலை மறியல், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.