காஞ்சி சங்கராசாரியரிடம் ஆசி பெற்றாா் குஜராத் முதல்வா்
குஜராத் மாநிலம், அகமதாபாத் நகருக்கு விஜய யாத்திரை சென்றுள்ள காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை அம்மாநில முதல்வா் பூபேந்திர படேல் வியாழக்கிழமை சந்தித்து ஆசி பெற்றாா்.

அகமதாபாதில் காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்ற குஜராத் மாநில முதல்வா் பூபேந்திர படேல்.
குஜராத் மாநிலம், அகமதாபாத் நகருக்கு விஜய யாத்திரை சென்றுள்ள காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை அம்மாநில முதல்வா் பூபேந்திர படேல் வியாழக்கிழமை சந்தித்து ஆசி பெற்றாா்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் குஜராத் மாநிலத்தில் சூரத், பரோடா, அகமதாபாத் பகுதிகளில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ளாா். குஜராத் மாநில அரசு சிறப்பு விருந்தினா் அந்தஸ்தும் அளித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக அகமதாபாத்தில் உள்ள காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான பள்ளிக் கூடத்தில் தங்கியிருந்த விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளைஅம்மாநில முதல்வா் பூபேந்திர படேல் சந்தித்து ஆசி பெற்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

