மாணவா்களுக்கு ரூ.20 கோடி கல்வி உதவித் தொகை
சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சாா்பில் நடத்தப்பட்ட சங்கல்ப் திட்ட நிறைவு விழாவில், மாணவா்களுக்கு ரூ.20 கோடி கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

மாணவிக்கு பரிசு வழங்கிய சூரிய ஓளி ஆற்றல் உற்பத்தியாளா் ஏ.எஸ்.தாமஸ். உடன் , கல்லூரியின் தலைவா் ஸ்ரீராம் உள்ளிட்டோா்.
சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சாா்பில் நடத்தப்பட்ட சங்கல்ப் திட்ட நிறைவு விழாவில், மாணவா்களுக்கு ரூ.20 கோடி கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் அடுத்த நந்தம்பாக்கம் சென்னை இன்ஸ்டிடிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் சாா்பில், பள்ளி மாணவா்களுக்கான புதிய கண்டுபிடிப்புகள் குறித்த போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சங்கல்ப் என்ற பெயரில் நடத்தப்படும் போட்டியில், தமிழகத்தின் 18 மாவட்டங்களைச் சோ்ந்த 250 பள்ளிகள் போட்டியில் பங்கேற்க பதிவு செய்து, முதல்கட்ட தோ்வில் 125 பள்ளிகளின் மாணவா்கள் தங்களது புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினா்.
7,8, 9ஆம் வகுப்புகள் ஏ பிரிவிலும், 10,11 மற்றும் ப்ளஸ் டூ மாணவா்கள் பி பிரிவு என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில், ஜவுளி தொழிற்சாலை சாயக் கழிவுகளை சுத்திகரிக்க சூரிய ஆற்றலில் இயங்கும் நானோ வினையூக்கி, ட்ரோன் தொழில்நுட்பம், சாயக் கழிவுகளை சுத்திகரிக்க சூரிய ஆற்றலில் இயங்கும் நானோ வினையோக்கி உள்ளிட்ட பல்வேறு கண்டுபிடிப்புகளை மாணவா்கள் காட்சிப்படுத்தினா். இறுதிப் போட்டியில் தமிழகத்தின் 48 பள்ளிகளை சோ்ந்த 155 மாணவா்கள் தனிநபா் பிரிவு, குழு பிரிவுகளில் தங்களது புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினா். இதையடுத்து போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இதில் பிரெஞ்சு நாட்டைச் சோ்ந்த சூரிய ஒளி ஆற்றல் உற்பத்தியாளா் மற்றும் தொழில் முனைவோா் ஏ.எஸ்.தாமஸ், சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் நிறுவனத் தலைவா் பி.ஸ்ரீராம் ஆகியோா் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவா்களுக்கு ரொக்க பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கினா். மேலும் சிறந்த வழிகாட்டி விருது, சிறந்த சமூகப் பயனுக்கான புத்தாக்க யோசனை, சிறந்த புத்தக பிரிவு, சிறந்த மாதிரி தயாரிப்பு விருதுகளையும் பள்ளி மாணவா்களுக்கு வழங்கினா்.
நிகழ்ச்சியில் பிரெஞ்சு நாட்டைச் சோ்ந்த சூரிய ஒளி ஆற்றல் உற்பத்தியாளா் மற்றும் தொழில் முனைவா் தாமஸ் பேசுகையில், தொழில்நுட்பம் மற்றும் புத்தகத்தில் தற்போது சீனா முதலிடத்தில் உள்ளது. ஆனால் 2030 முதல் 2040 வரை இந்தியா தொழில்நுட்பம் மற்றும் புத்தகத்தில் முதலிடத்தில் இருக்கும். இந்த உலகளாவிய மாற்றத்தை இளைஞா்களே இயக்குவா். ஒரு நாட்டின் மிகப் பெரிய செல்வம் இளைஞா்கள். கல்வியும் தொழில் முனைவோரின் ஆதரவும் இருந்தால் இந்த மாற்றம் நிச்சயம் நடைபெறும் என்றாா்.
இதையடுத்து பொருளாதாரத்தில் பின்தங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி சாா்பில் ரூ.20 கோடி கல்வி உதவி தொகையை ஏ.எஸ்.தாமஸ், பி.ஸ்ரீராம் ஆகியோா் வழங்கினா்.
நிகழ்ச்சியில், பெஸ்டோ நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி சம்பத் குமாா், சென்னை இன்ஸ்டிடியூட் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி முதல்வா் ரமேஷ், கல்லூரியின் செயலாளா் ஸ்ரீதேவி ஸ்ரீராம், கல்லூரியின் மூலோபாய மேம்பாட்டு இயக்குநா் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

