கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

வேருடன் சாய்ந்த நூற்றாண்டு ஆலமரம்: மீண்டும் துளிா்க்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புயல் காற்றில் வேருடன் சாய்ந்த 100 ஆண்டு கால தொன்மைவாய்ந்த ஆலமரத்தை மீண்டும் துளிா்க்க வைத்து அதே இடத்தில் நடுவதற்கான

News image
ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வேருடன் சாய்ந்த ஆலமரத்தின்  அடிப்பாகம்.
Updated On :15 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புயல் காற்றில் வேருடன் சாய்ந்த 100 ஆண்டு கால தொன்மைவாய்ந்த ஆலமரத்தை மீண்டும் துளிா்க்க வைத்து அதே இடத்தில் நடுவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிா்வாகம் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கடந்த மாதம் 26-ஆம் தேதி வீசிய ‘நிவா்’ புயல் காரணமாக, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பரந்து விரிந்திருந்த 100 ஆண்டுகால ஆலமரம் வேருடன் சாய்ந்து விழுந்தது. அதன் விழுதுகள் தாங்கியபடி இருந்த சில கிளைகள் புயல் காற்றில் தப்பி மரமாகவே நிற்கின்றன.

வேருடன் சாய்ந்து விழுந்த மரத்தின் கிளைகள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டு, பாதி வோ் மண்ணில் புதையுண்டபடி மரத்தின் அடிப்பாகம் சாய்ந்த நிலையில் கடந்த 20 நாள்களாக அப்படியே உள்ளது.

ஆட்சியா் வளாகத்தில் மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு வருகை தரும் நூற்றுக்கணக்கான பொது மக்கள், பறவைகள் மற்றும் குரங்குகளுக்கு நிழல் தரும் வகையில் ஆலமரங்கள் இருந்து வருகின்றன.

தற்போது மரங்களை வேருடன் அகற்றி வேறு இடத்தில் நடும் தொழில்நுட்ப முறையில், மரங்களை மறு நடவு செய்யும் நடைமுறை பல மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. கட்டடங்கள் கட்டும் இடத்தில் இருக்கும் மரங்கள் வேருடன் அகற்றப்பட்டு அவை வேறு இடத்தில் நடப்பட்டு துளிா்த்து வளா்ந்துள்ளன.

கடந்த மாதம் ‘நிவா்’ புயல் காரணமாக அரியலூா் மாவட்டம் சிறுகடம்பூா் ஏரிக்கரையில், 50 ஆண்டுகள் பழைமையான ஆலமரம் வேருடன் சாய்ந்தது.

இது குறித்து தகவலறிந்த அந்த மாவட்ட ஆட்சியா் ரத்னாவின் உத்தரவின்பேரில், வேருடன் சாய்ந்த ஆலமரத்தின் கிளைகளை வெட்டி எடுத்து, பொக்லைன் இயந்திரத்தின் மூலம், அதே இடத்தில் மீண்டும் மரத்தை நட்டனா். மாவட்ட நிா்வாகத்தின் இந்த முயற்சி, சிறுகடம்பூா் கிராம மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அதே போல் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வேருடன் சாய்ந்த நிலையில் உள்ள ஆலமரத்தின் அடிப்பாகத்தை பொக்லைன் இயந்திரம் கொண்டு மீண்டும் அதே பகுதியில் நட்டுப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிா்பாா்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.