விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 78 போ் மீது வழக்கு

தீபாவளிப் பண்டிகையையொட்டி, வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 78 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :6 நவம்பர் 2021, 6:08 pm

DIN

தீபாவளிப் பண்டிகையையொட்டி, வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 78 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகை நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும், விதியை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாத சிறைத்தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வேலூா் மாவட்டத்தில் அரசு அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்தவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். அதன்படி, வேலூா், காட்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு போன்ற பகுதிகளில் மொத்தம் 57 போ் மீது அந்தந்த காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 21 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.