மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பருவமழை எதிரொலி: பாலாறு, பொன்னை ஆற்றில் வெள்ளப் பெருக்கு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டிலுள்ள 557 ஏரிகளில் 82 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளது. 

News image
ராணிப்பேட்டை மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் ஏரி முழு கொள்ளவை எட்டியதை அடுத்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
Updated On :18 அக்டோபர் 2021, 6:45 am

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டிலுள்ள 557 ஏரிகளில் 82 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளது. 

ராணிப்பேட்டை மாவட்டத்தின் மிகப் பெரியாகவும், தமிழகத்தின் மூன்றாவது நீர்ப்பாசன பெரிய ஏரியாக விளங்கும் காவேரிப்பாக்கம் ஏரிக்கு தொடர் மழையின் மற்றும் பாலாற்று அணைக்கட்டில் இருந்து வெளியேற்றப்படும் நீர் ஏரியின் முழு கொள்ளளவை நீர் நிரம்பியுள்ளது. ஏரிக்கு வரும் 500 கனஅடி நீர்வரத்து ஏரியின் பாதுகாப்பு கருதி 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

காவேரிப்பாக்கம் ஏரியை தொடர்ந்து மாவட்டத்திலுள்ள 557 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 369 ஏரிகளும் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 188 ஏரிகளும் பயனடைகிறது. இதனால் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 369 ஏரிகளில் மொத்த நீர் கொள்ளளவு 8.52 டிஎம்சி ஆகும். தற்போது நிலவரப்படி 4.88 டிஎம்சி தண்ணீர் நிரம்பியுள்ளது.

மொத்தம் உள்ள ஏரிகளில் 82 ஏரிகள் 100% கொள்ளளவு அடைந்துள்ளது. 30 ஏரிகள் 75% தண்ணீரும், 43 ஏரிகளில் 50 சதவீதம் தண்ணீரும், 72 ஏரிகளில் 25 சதவீதம் தண்ணீர் அளவு கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 144 ஏரிகளில் 25 சதவீதத்திற்கு கிழ் ஏரிகள் தண்ணீர் நிரம்பியுள்ளது. பாலாறு அணை கட்டிலில் இன்று காலை நிலவரப்படி 6 ஆயிரம் கனஅடி நீர் தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

இவற்றில் சுமார் 2 ஆயிரத்து 500 கன அடி நீர் காவேரிப்பாக்கம் மகேந்திரவாடி ஏரிகளுக்கு திருப்பி விடப்படுகிறது. 3,500 கன அடி நீர் பாலாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. பாலாறு மற்றும் பாலாறு அணைக்கட்டு காவேரிப்பாக்கம் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் குளிக்கவும் ஆற்றைக் கடந்து செல்லவும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.