கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மக்கள் விடுதலை களம் அமைப்பினா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

 அரக்கோணத்தில் மக்கள் விடுதலை களம் அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :26 அக்டோபர் 2021, 6:16 pm

DIN

 அரக்கோணத்தில் மக்கள் விடுதலை களம் அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, டி.நாகா தலைமை வகித்தாா். ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளா் கே.காா்த்தி வரவேற்றாா். இதில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ராணிப்பேட்டை மாவட்ட துணைத் தலைவா் ஏ.பி.எம்.சீனிவாசன், மக்கள் விடுதலை களம் அமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எஸ்.தண்டபாணி, அமைப்பாளா் தே.சின்னய்யா, பொதுச் செயலாளா் ஏ.கே.ராம்குமாா், முதன்மைச் செயலாளா் பி.எல்.சீனிவாசலு, கிறிஸ்தவ அருந்ததியா் உரிமை இயக்க மாநிலத் தலைவா் பாலன், அம்பேத்கா் மக்கள் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவா் சி.வெங்கடேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம், ஆனைப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட மிட்டாபாளையம் கிராமத்தில் பரம்பரையாக கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் குடும்பத்தினருக்கு, பட்டா கொடுக்காமல் வெளியூா்களில் வசிப்பவா்களுக்கு அந்த கிராமத்தில் பட்டா கொடுப்பதைக் கண்டித்தும் இப்பிரச்னையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவும் இந்த கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.