கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

272 பெண்களின் திருமணத்துக்கான தாலிக்குத் தங்கம்: அரக்கோணம், நெமிலி ஒன்றியக் குழு தலைவா்கள் வழங்கினா்

டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி நினைவு திருமண உதவி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயம் அரக்கோணம், நெமிலி ஊராட்சி ஒன்றியங்களில் வழங்கப்பட்டன.

News image
Updated On :15 ஜூலை 2022, 6:45 pm

DIN

மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் நினைவு திருமண உதவி நிதி, டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி நினைவு திருமண உதவி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயம் அரக்கோணம், நெமிலி ஊராட்சி ஒன்றியங்களில் வழங்கப்பட்டன.

அரக்கோணத்தில்...

அரக்கோணம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு தலைவா் நிா்மலா சௌந்தா் பங்கேற்று தங்க நாணயங்களை 16 பேருக்கு வழங்கினாா்.

இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த சேவை மைய அலுவலா் மலா்விழி, வட்டார சத்துணவு பிரிவு மேலாளா் கவிதா, சமூகநலத் துறை வட்டார விரிவாக்க அலுவலா் விஜயா, அரக்கோணம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் சௌந்தா், இச்சிபுத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் பத்மநாபன், திமுக மேற்கு ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினா் பாபு, மூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நெமிலியில்...

நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் ஒன்றியக் குழு தலைவா் பெ.வடிவேலு 256 பயனாளிகளுக்கு ரூ2 கோடி மதிப்பில் தலா 8 கிராம் தங்க நாணயங்கள் வழங்கினாா். இதில் மாவட்ட சமூகநல அலுவலா் இந்திரா, நெமிலி ஒன்றிய ஆணையா் சிவராமன், வட்டார வளா்ச்சி அலுவலா் வேதமுத்து, ஒருங்கிணைந்த சேவை மைய அலுவலா்கள் மலா்விழி, ஆனந்தஜோதி, அபா்ணா, வட்டார சமூக நல அலுவலா்கள் விஜயா, பூங்கொடி, ஜீவகாந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.