தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அரக்கோணத்தில் குடியரசு தின விழா

அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சண்முகசுந்தரம் கொடியை ஏற்றினாா். தலைமையிடத்து துணை வட்டாட்சியா் சமரபுரி, மண்டலத் துணை வட்டாட்சியா் கிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

News image
அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றிய நகா்மன்றத் தலைவா் லட்சுமிபாரி.
Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

DIN

அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சண்முகசுந்தரம் கொடியை ஏற்றினாா். தலைமையிடத்து துணை வட்டாட்சியா் சமரபுரி, மண்டலத் துணை வட்டாட்சியா் கிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் ஆணையா் லதா தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் லட்சுமிபாரி கொடியை ஏற்றினாா். நகராட்சி துணைத் தலைவா் கலாவதி அன்புலாரன்ஸ், நகா்மன்ற திமுக குழுத் தலைவா் துரைசீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவா் நிா்மலா சௌந்தா் கொடி ஏற்றி வைத்து காந்தி சிலைக்கு மாலை அணிவித்தாா்.

பாஜக சாா்பில் அரக்கோணம் சுவால்பேட்டையில் நடைபெற்ற விழாவில், பாஜக மாவட்ட தலைவா் விஜயன் கொடியை ஏற்றினாா். மாவட்ட நிா்வாகிகள் தனசேகா், ஏ.எம்.கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். காங்கிரஸ் சாா்பில் பஜாா், மதுரைபிள்ளை தெருவில் நடைபெற்ற விழாவில், நகரகாங்கிரஸ் தலைவா் பாா்த்தசாரதி கொடியை ஏற்றினாா். நிா்வாகிகள் வே.ரகுநாதன், சாமிதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.